Aran Sei

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநர் எழுதிய  கடிதம் – தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளன் விடுதலை தொடர்பான விவிவகாரத்தில் தமிழக அரசுக்குத் தமிழக ஆளுநர் எழுதிய கடிதம் தொடர்பாக, தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மோடியும் ஏழு கொடிய பாவங்களும் தவறான சவடாலும் – பத்ரி ரெய்னா

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல்நோக்கு கண்காணிப்பு அமைப்பின் (Multi Dimensional Monitoring Agency) அறிக்கைக்காகக் காத்திருக்கிறேன் என தமிழக அரசுக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எழுதிய கடிதத்தின் நகலை வழங்கக் கோரி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

உத்தரகாண்ட் கும்பமேளாவில் காவல் துறைக்கு ஆள் பற்றாக்குறை – உதவக்கோரி ஆர்எஸ்எஸுக்கு கடிதம்

அந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு, ஆளுநர் எழுதிய கடிதத்தின் நகலை அளிப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மனுவைப் பேரறிவாளனின் விடுதலை வழக்குடன் இணைத்து விசாரிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்