Aran Sei

ஆயுர்வேதா படிப்பில் அறுவை சிகிச்சை: இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

credits : the new indian express

யுர்வேதத்தில் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் சில வகையான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளப் பயிற்றுவிக்கப்படலாம் என்று அளிக்கப்பட்டிருக்கும் ஒப்புதல் தொடர்பாக, ஆயுஷ் அமைச்சகம், இந்திய மருத்துவ மத்திய கவுன்சில், தேசிய மருத்துவ ஆணையம் ஆகியவற்றிற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த நவம்பர் 20,2020 அன்று, இந்திய மருத்துவ மத்திய கவுன்சில், (ஆயுர்வேதா பட்டப்படிப்பு முதுகலையில் ) 2016-ல் சில திருத்தங்களைக் கொண்டு வந்தது. அதன் படி., 39 பொது அறுவை சிகிச்சைகளையும், கண், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட 19 இடங்களிலும் அறுவை சிகிச்சை செய்வதையும் முதுகலை பட்டப்படிப்பில் இணைத்திருந்தது.

இது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”முக்கியமற்ற உறுப்புகளிலிருந்து உலோக மற்றும் உலோகமற்ற அந்நிய பொருட்களை அகற்றுதல், அத்தியாவசிய உறுப்புகளின் எளிய நீர்க்கட்டி அல்லது தீங்கற்ற கட்டிகளை அகற்றுதல், குடலிறக்கத்தைச் சரி செய்வது, ஆபத்தான காயங்களை சரி செய்வது, வயிற்றில் இருக்கும் அந்நிய பொருட்களை நீக்குவது, கறை அறுவை சிகிச்சை, கண்புரை அறுவை சிகிச்சை, எண்டோஸ்கோபிக் சைனஸ் அறுவை சிகிச்சை ஆகியவற்றை முதுநிலை பட்டப்படிப்பில் இணைப்பதாக பட்டியலிட்டிருந்தது”.

ஆயுர்வேத மருத்துவர்கள் தேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் – மத்திய ஆயுஷ் அமைச்சர் கருத்து

இந்நிலையில், இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் கொண்டு வந்துள்ள திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

கொரோனாவிற்கு எதிராக பதாஞ்சலியின் கொரோனில் மருந்து – அங்கீகாரம் வழங்கிய ஆயுஷ் அமைச்சகம்

இது தொடர்பாக, இந்திய மருத்துவ சங்கம் தாக்கல் செய்த மனுவில், ”ஆயுர்வேத பாடத்திட்டத்தில், அறுவை சிகிச்சைகளை இணைப்பதற்கான அதிகாரம் இந்திய மருத்துவ மத்திய கவுன்சிலுக்கு இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

`ஆயுஷ் திட்டத்தில் சிறப்பு அந்தஸ்து வேண்டும்’ – ராஜஸ்தான் முதல்வர் கோரிக்கை

இந்திய மருத்துவ சங்கம் (ஆயுர்வேதா) தொடர்பாக ஆஜரான வழக்கறிஞர், வி.கே.பிஜு, ”ஆஷ்டாங்கா ஆயுர்வேதாவின் வழியாக பல நூற்றாண்டுகளாக அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது என்பது உலகம் முழுவதும் ஒத்துக் கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனில் சர்ச்சை: இந்திய மருத்துவ சங்கம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது: பதஞ்சலி குற்றச்சாட்டு

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வால் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஆயுஷ் அமைச்சகம், இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் தேசிய மருத்துவ ஆணையம் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்