ஆராய்ச்சி பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையிலும் ஆசிரியர்களை நியமிப்பதிலும் இடஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்த உத்தரவிடக் கோரிய மனு தொடர்பாக, ஒன்றிய அரசிற்கும் 23 ஐஐடிகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நேற்று(நவம்பர் 24), உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆராய்ச்சியாளர் சச்சிதா நந்த் பாண்டே தாக்கல் செய்த மனுவை விசாரித்துள்ளது.
அம்மனுவில், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் புகார்களுக்கு வெளிப்படைத்தன்மையுடனும் காலக்கெடுவுக்குள்ளும் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை உருவாக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரியுள்ளது.
‘மேகலயாவில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சித்தாவல்’ – வீழ்கிறதா காங்கிரஸ்
மேலும், அம்மனுவில், பணியிலுள்ள ஆசிரியர்களின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்வது, இடஒதுக்கீடு விதிமுறைகளை மீறுதல் கண்காணித்தல் மற்றும் வெளிப்படையான ஆட்சேர்ப்புக் கொள்கையை உருவாக்குவதற்காகவும் தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்ட குழுவை அமைக்க ஐஐடிகளுக்கு உத்தரவிடுமாறும் கோரப்பட்டுள்ளது.
ஐஐடிகளில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மட்டுமே நோட்டீஸ் அனுப்புவோம் என்று தெளிவுபடுத்தியுள்ள அமர்வு, ஆராய்ச்சி பட்டப்படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை முறைகளும் ஐஐடிகளில் ஆசிரியர்கள் நியமிப்பதும் அரசியலமைப்பிற்கு எதிரானது, சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது என்று தெரிவித்துள்ளார்.
தற்போதைய இடஒதுக்கீடு கொள்கையின்படி, எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) முறையே 15 விழுக்காடு, 7.5 விழுக்காடு மற்றும் 27 விழுக்காடு என்ற அளவில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஐஐடிகளில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி ஆராய்ச்சி மாணவர்கள் முறையே 9.1 விழுக்காடு, 2.1 விழுக்காடு மற்றும் 23.2 விழுக்காடு என்ற அளவில் மட்டுமே சேர்ந்துள்ளதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.