Aran Sei

உத்திரபிரதேசத்தில் 20 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கைதிகள் – இடைக்கால பிணை வழங்கிய உச்சநீதிமன்றம்

credits : the indian express

த்திரபிரதேச மாநிலத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 100 கைதிகளுக்கு ஒரே உத்தரவில் இடைக்கால பிணை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிணை வழங்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஆக்ரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் ஜே.கே. மகேஸ்வரி அடங்கிய அமர்வு, “மனுதாரர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதால், அவர்களுக்கு விசாரணை நீதிமன்ற விதிக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பிணை வழங்கப்படுகிறது” என தெரிவித்துள்ளது.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான நீதிபதி ரிஷி மல்கோத்ரா, “20 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை பெற்றவர்களுக்கு, இந்திய அரசியலமைப்பின் 161 விதியின் கீழ் உரிமைகளைப் பெற்றுள்ளனர். ஆகஸ்ட் 1 2018 ஆம் தேதியின் கொள்கையின் படி முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு பதிலாக, இன்னும் சிறையில் அடைத்து வைத்திருப்பது மோசமான மற்றும் கவலை தரக்கூடிய ஒன்று” என வாதிட்டுள்ளார்.

”இது சட்டவிரோத தடுப்பு காவல் தவிர வேறொன்றுமில்லை” என அவர் கூறியுள்ளார்.

முன்னதாக இதே போன்று பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த சில கைதிகளுக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டிருந்தது.

Source : The Hindu

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்