Aran Sei

தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு – மராட்டிய இடஒதுக்கீடு வழக்கின் முடிவைப் பொறுத்து விசாரணை

Image Credits: New Indian Express

மிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுத்திருப்பதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் மராட்டியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வரும் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளிக்கும் வரை காத்திருக்க வேண்டும் என, நீதிபதிகள் அசோக் பூசன் மற்றும் ஆர்.சுபாஷ் ரெட்டி அடங்கிய அமர்வு முடிவு செய்திருப்பதாக, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு, மராட்டியர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் செல்லுபடியாகுமா என்பது குறித்து விசாரணை நடத்தவுள்ளது.

பாலியல் வன்கொடுமை புகார் கூறியவரை திருமணம் செய்யக் கூறிய விவகாரம் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகக் கோரிக்கை

மராத்தா சமூகத்திற்கு இட ஒதுக்கீடு அளித்திருப்பதன் மூலம், தமிழகத்தை போலவே மகாராஷ்டிராவிலும், இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டை கடந்து 65 ஆக உயர்ந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையை, மார்ச் 18 ஆம் தேதிக்குள் முடிப்பதற்கு அரசியல் சாசன அமர்வு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை எதிர்த்து, சி.வி.காயத்ரி என்ற மாணவி, தனது தந்தையின் மூலம் தாக்கல் செய்துள்ள மனுவில், “தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு சட்டத்தின் மூலம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது தன்னிச்சையாக, அதிகப்படியானதாக, நியாயமற்ற முறையில் இருக்கிறது. இது பொதுப்பிரிவினரின் உரிமைகளை கடுமையாக பாதிக்கிறது. இந்திரா சஹானி வழக்கில் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு மற்றும் 2018 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட 102வது அரசியலமைப்பு திருத்ததிற்கும் எதிரானது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாப்சி, அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை – பேராட்டங்களை ஆதரித்தது காரணமா?

இன்று, தமிழக அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், முகில் ரோஹத்கி, சேகர் நாப்தே மற்றும் யோகேஷ் கண்ணா, தமிழக அரசின் இட ஒதுக்கீடு என்பது “அளவிடக்கூடிய தரவுகளின்” அடிப்படையில் அமைந்தது எனத் தெரிவித்ததாக, தி இந்து கூறியுள்ளது.

“தமிழகத்திடம் அளவிடக்கூடிய தரவுகள் உள்ளன. 1980 ஆம் ஆண்டு முதல், ஆணையங்கள் அமைந்திருக்கிறோம்… இது 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது அல்ல” என நாப்தே வாதிட்டதாக, தி இந்து குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு (கல்வி மற்றும் வேலைவாய்ப்பில்) 69 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும், தமிழக அரசின் 1993 ஆம் ஆண்டு சட்டம், நீதித்துறையின் மறு ஆய்வில் இருந்து பாதுக்காக்கும் விதமாக, இந்திய அரசியலமைப்பின் 9 வது அட்டவனையின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வின் விசாரணையில் இருக்கும் மராத்தா வழக்குடன் சேர்த்து விசாரிக்கக் கூடாது என, தமிழ அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிட்டதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்