Aran Sei

‘உச்சநீதிமன்றத்தின் விமர்சனங்களுக்கு பிறகுதான் இலவச தடுப்பு மருந்தை அறிவித்த ஒன்றிய அரசு’ – எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

credits : the indian express

பிரதமர் நரேந்திரமோடி நேற்றைய தினம் 18 வயதுக்கு மேலுள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசத் தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவித்தது உச்சநீதிமன்றத்தின் விமர்சனம் மற்றும் அரசியல் கட்சிகளின் அழுத்தத்தால் எடுக்கப்பட்ட முடிவு என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், எதிர்க்காட்சிகள் ஆளக்கூடிய மாநிலத்தைச் சார்ந்த முதலமைச்சர்கள், இந்த தடுப்பு மருந்து கொள்கையில் திருத்தம் கொண்டுவரும் திட்டத்தை முன்னரே கொண்டுவந்திருக்க வேண்டுமெனவும், இந்தக் காலதாமதத்தால் பலரின் உயிரை விலையாக கொடுத்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

அனைவருக்கும் தடுப்பு மருந்து: ‘பிரதமரின் தாமதமான முடிவால் பல உயிர்களை இழந்துவிட்டோம்’ – மம்தா பானர்ஜி

பிரதமரின் இந்த முடிவுக்கு ஒடிசா, தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர்கள் ட்விட்டர் வழியாக தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

ஆனால், இதுகுறித்து தெரிவித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானெர்ஜி, “கடந்த பிப்ரவரி 21 லிருந்து தொடர்ந்து பிரதமருக்கு தடுப்பு மருந்தை இலவசமாக வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம். ஆனால், நான்கு மாதங்களுக்குப் பின்னர் அழுத்தத்திற்கு பிறகு இறுதியாக எங்கள் குரலைத் தற்போது கேட்டுச் செயல்படுத்தியுள்ளார். கெடுவாய்ப்பாக இந்த காலதாமதத்தால் பலரின் உயிரை விலையாகக் கொடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளதாகவும் தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நியூட்ரினோ திட்டத்திற்கான டாடா நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்

இதுகுறித்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா,”அரசு மருத்துவமனையில் தடுப்பு மருந்து கிடைக்காததால், தனியார் மருத்துவமனையில் தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ள ஒருவர் ₹1,900 லிருந்து ₹2,700 வரை இரண்டு தடவை தடுப்புமருந்து செலுத்திக் கொள்ள வேண்டிய சூழல் நிலவிய நிலையில் ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை பகுதியாக அறிவித்துள்ளது” என்று கூறியுள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

மேலும், தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படுவது குறித்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “தடுப்பு மருந்து எல்லோருக்கும் இலவசம் என்றால், ஏன் தனியார் மருத்துவமனைகள் விலை வைக்கின்றன?” என்று குறிப்பிட்டுள்ளதாக தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அனைவருக்கும் இலவச தடுப்பு மருந்து அறிவிப்பு காலம் தாமதமானது – மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு எப்படி உறுதிப்படுத்துமென சத்தீஸ்கர் முதல்வர் கேள்வி

தனியார் மருத்துவமனைக்கு 25% தடுப்பு மருந்துகள் வழங்கப்படுவது குறித்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, “தடுப்பு மருந்து திட்டம் மக்களின் பணத்தில் செயல்படுத்தப்படும்போது, ஏன் இந்த பாகுபாடு? இது எங்களுக்கு மோடி அரசு வழங்கும் பெரிய வாய்ப்பல்ல, தனியார் மருத்துவமனைக்கு வழங்குவது எங்களுக்கு அளிக்கும் உதவி அல்ல.” என்று தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் அதை அரசு செவி கொடுக்காத நிலையில், உச்சநீதிமன்றம் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சிபிஐ கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளதாகவும், மேலும், “தடுப்பு மருந்து செலுத்துவது அரசின் கடமை; அது தொண்டு நிறுவனம்போல நடந்துகொள்ளக் கூடாது” என்று கூறியுள்ளதாகவும் தி இந்து செய்தி குறிப்பிடுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்