Aran Sei

‘கொரோனா அவசர தேவைக்காக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரை தடுக்க கூடாது’ – மாநில அரசுகள், காவல்துறையினருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

credits : the indian express

கொரோனா தொடர்பான அவசர தேவைக்காக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரை காவல்துறையினர் அச்சுறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில் கொரோனா நிலைமை குறித்து தானாக முன்வந்த விசாரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், எல். நாகேஷ்வர ராவ் மற்றும் எஸ். ரவீந்திர பட் அடங்கிய அமர்வு இதனைத் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”இதனை ஆரம்பத்திலேயே கண்டிக்க விரும்புகிறோம். அவசர மருத்துவ தேவைக்களுக்காக சமூக ஊடகங்களைப் மக்கள் பயன்படுத்துவது தவறான தகவல் பரப்பவுதில் சேராது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். அது போன்ற தகவல்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க கூடாது. மீறிச் செய்தால் அந்தச் செயல் நீதிமன்ற அவமதிப்பாக பார்க்கப்படும்” என நீதிபதி சந்திரசூட் கூறியதாக தி வயர் தெரிவித்துள்ளது.

அணையாமல் சிதையில் எரியும் தீ – கண்ணீரால் அணைத்துவிடமுடியுமா என்ன?

தகவல்கள்மீது எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்கக் கூடாது என மாநில அரசுகளுக்கும் காவல்துறை தலைமை இயக்குநருக்குத் தெரிவித்துக்கொள்கிறோம் என அவர்கள் தெரிவித்தாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவ தேவைகளுக்காக மக்கள் சமூக ஊடங்களை பயன்படுத்துவதற்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் வரவேற்ப்பு தெரிவித்திருந்ததாக லைவ்லா இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.

கொரோனா உயிரிழப்பை குறைத்துக் கூறிய மத்திய சுகாதார அமைச்சர் – பதவி விலக கோரும் அமெரிக்க தொற்றுநோயியல் நிபுணர்

உத்தரபிரதேசத்தில், சமீபத்தில் கொரோனா தொடர்பாக மாநில அரசின்  நிர்வாகத்தைக் கேள்விக்குட்படுத்தும் வகையிலோ அல்லது உதவி கேட்கும் நபர்கள்மீது யோகி ஆதித்யநாத் அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  மாநிலத்தின் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை வெளியில் தெரியாமல் இருக்க அனைத்தையும் ஒடுக்கும் வேலையில் அதித்யநாத் அரசு ஈடுபடுவதாக தி வயர் கூறியுள்ளது.

சமீபத்திய கூட்டத்தில், ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகளை வெளியே அனுப்பும் மருத்துவமனைகள்மீதும், ஆக்சிஜன் பற்றாக்குறையை தொடர்பாக புகார் தெரிவிக்கும் ஊடகங்கள்மீதும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருப்பதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்