Aran Sei

‘சாலையை மறித்துப் போராட்டம் நடத்தக்கூடாது’ – விவசாயிகள் போராட்டம் குறித்து உச்சநீதிமன்றம் கருத்து

க்கள் பயன்படுத்தும் சாலையை மறித்து அவர்களுக்கு  இடையூறு ஏற்படுத்திப் போராட்டம் நடத்தக் கூடாது என்று விவசாயிகள் சார்பில் தொடர்ந்த மனுவில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்துக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் அமைதியான முறையில் 200 விவசாயிகள் சத்யாகிரஹப் போராட்டம் நடத்தப் போகிறோம். அதற்கு அனுமதி வழங்கக் கோரி அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி விவசாயிகள் மற்றும் வேளாண்ஆர்வலர்கள் அமைப்பான கிசான் மகாபஞ்சாயத்து சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

நூறு கோடி தடுப்பூசி சாதனைக்காக ஒன்றிய அரசைப் பாராட்டிய சசி தரூர் – பதிலடி கொடுத்த காங்கிரஸ்

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்எஸ். கவுல் தலைமையில் அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது. விவசாயிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பிரசாந்த் பூஷன் ஆஜராகியுள்ளார். ஹரியாணா அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகியுள்ளார்.

விவசாயிகள் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர்கள் வாதிடுகையில் “ விவசாயிகள் போராட்டம் செய்யத் தொடங்கியதும் வேண்டுமென்றே மக்களின் அதிருப்தியை விவசாயிகள் பக்கம் திருப்ப அரசுதான் தடைகளை உருவாக்குகிறது. ஆதலால், ராம் லீலா மைதானத்திலும், ஜந்தர் மந்தரிலும் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

தாலிபான் துணைப்பிரதமரைச் சந்தித்த இந்திய அதிகாரிகள் – தலிபான் அரசுடன் நட்பு பாராட்டுமா இந்தியா?

இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கடும் எதிர்ப்புத் தெரிவித்து, “ கடந்த ஆண்டு சுதந்திரத்தன்று நடந்த வன்முறை நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். ஏராளமானோர் காயமைடைந்தனர், பலர் கொல்லப்பட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி கவுல் அமர்வு “ விவசாயிகள் போராட்டம் நடத்துவதில் பிரச்சினை இருக்கிறது.நாங்கள் எந்த பிரச்சினையையும் ஏற்கவும் தயாரில்லை. கடந்த 2 ஆண்டுகளாக அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடக்கும் பிரச்சினைக்குதீர்வு தேவை.

இந்த நீதிமன்றம் ஏற்கெனவே ஷாகீன் பாக் போராட்டம் தொடர்பான வழக்கிலேயே கூறிவிட்டது. போராட்டம் நடத்த உரிமை இருக்கிறது, ஆனால், மக்கள் சுதந்திரமாக நடமாடும் உரிமையை பாதிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கூறிவிட்டதால், மீண்டும் மீண்டும் அதைக் கூற எந்தக் காரணமும் இல்லை. அதேநேரம் சில தீர்வுகளும் தேவை, சாலைகளை மறித்து போராடக்கூடாது” எனத் தெரிவித்துள்ளனர்

‘மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்’- ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிடுகையில் “ போராடுவது அடிப்படை உரிமை, சாலைகளை மூடுவது காவல்துறையின் செயல். போராட்டக்காரர்கள்தான் வன்முறையைத் தூண்டுகிறார்கள் என்று அரசு கூறுகிறது. ஏன் ஜந்தர் மந்தரில் விவசாயிகளை அனுமதிக்க மறுக்கிறீர்கள்.

ஆளும் பாஜக நேற்று வங்கதேச அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்த மட்டும் அனுமதியளிக்கப்பட்டது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஜந்தர் மந்தரில் விவசாயிகல் போராட்டம் நடத்த அனுமதிப்பது மட்டும்தான்” எனத் தெரிவித்துள்ளார்.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகைியல் “ கடந்த முறை இதேபோன்று அனுமதி கேட்டு போராட்டம் நடத்தி தீவிரமான பிரச்சினையானது” எனத் தெரிவித்தார்.

`சர்தார் உத்தம்’ – பிற தேச பக்தி திரைப்படங்களில் இருந்து ஏன் மாறுபடுகிறது?

துஷ்யந்த் தவே பதில் அளிக்கையில் “ வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கானது இல்லை என்று கருதுகிறார்கள். அது வேறுயாருடைய நலனுக்காக உருவானது. விவசாயிகளுக்கு எதிராக குற்றம்சாட்டினால், நாங்கள் உங்களுக்கு எதிராக குற்றம்சாட்டுவோம். ஒரே தீர்வு ராம் லீலா மைதானத்தில் விவசாயிகளைப் போராட்டம் நடத்த அனுமதிப்பது மட்டும்தான்” என்றார்

துஷார் மேத்தா வாதிடுகையில், “ ராம்லீலா மைதானம், ஜந்தர் மந்தர் பகுதியில் ஏராளமான மக்கள் குடியிருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

விவசாயிகள் தொடர்ந்த மனுவின் விசாரணையை டிசம்பர் 7-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

 

Source: the hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்