சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
இன்று(ஜனவரி 31), உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள தகவலின்படி, கடந்தாண்டு டிசம்பர் 14ஆம் தேதி மற்றும் இந்தாண்டு ஜனவரி 29ஆம் தேதிகளில் நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் கூட்டங்களில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி நியமனம் தொடர்பான இத்தீர்மானம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 29ஆம் தேதி நடந்த கூட்டத்தில் கொலீஜியத்தால் நிறைவேற்றப்பட்ட மற்றொரு தீர்மானத்தில், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் ஏழு வழக்கறிஞர்களை நீதிபதிகளாக பதவி உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலீஜியம் கூட்டத்தில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டு, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதியாக மாற்றப்பட்டார்.
வழக்கறிஞர்கள் மணீந்தர் சிங் பாட்டி, துவாரகா திஷ் பன்சால் மற்றும் மிலிந்த் ரமேஷ் பட்கே ஆகியோரை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிகளாக உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், நீதித்துறை அதிகாரிகளாக செயல்பட்டு வரும் அமர்நாத் கேஷர்வானி, பிரகாஷ் சந்திர குப்தா, தினேஷ் குமார் பாலிவால் ஆகியோரை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
Source: ANI, PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.