Aran Sei

அர்னாபுக்கு உடனடி ஜாமீன் அளித்த உச்சநீதிமன்றத்தில், 931 ஜாமீன் மனுக்கள் நிலுவை – ஆர்டிஐ தகவல்

ச்ச நீதிமன்றத்தில், ஜாமீன் மற்றும் தண்டனை நிறுத்திவைக்க கோரும் 1072 மனுக்கள் நிலுவையில் உள்ளதென தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு உச்சநீதிமன்றம் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், ரிபப்ளிக் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, தற்கொலைக்கு தூண்டிய வழக்கொன்றில் கைது செய்யப்பட்டு, ஒரு வார காலத்திற்குள்ளேயே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, தகவல் அறியும் உரிமை சட்ட செயற்பாட்டாளரான சாகேத் கோகலே, 1) உச்ச நீதிமன்றத்தில் எத்தனை இடைக்கால ஜாமீன் மனுக்கள் நிலுவையில் உள்ளன? 2)இடைக்கால ஜாமீன் மனு தாக்கல் செய்த பிறகு, அது நீதிபதிகளின் அமர்வின் முன் கொண்டு செல்வதற்கு என உள்ள சராசரி கால இடைவேளை எவ்வளவு? என தகவலறியும் உரிமை சட்டத்தின் வழியே உச்ச நீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பியதாக லைவ்லா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லி கலவரம் – சிறையில் தாக்கப்படும் முஸ்லீம் அரசியல் கைதிகள்

இதற்கு பதிலளித்துள்ள உச்ச நீதிமன்றம்,  “ஜாமீன் மனுக்கள் 931 நிலுவையில் உள்ளன; தண்டனை நிறுத்தி வைக்க கோரும் மனுக்கள் 141 நிலுவையில் உள்ளன” என தெரிவித்துள்ளது.

மனுக்களுக்கான சராசரி காத்திருப்பு காலம் எவ்வளவு என்ற கேள்விக்கு, “அந்த வடிவத்தில் உச்ச நீதிமன்றம் தகவலை சேமித்து வைப்பதில்லை” எனவும், உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றியே மனுக்கள் நீதிபதிகளின் அமர்வுக்கு கொண்டு செல்லப்படுகின்றன அல்லது நீக்கப்படுகின்றன எனவும் உச்ச நீதிமன்றத்தின் தகவல் அதிகாரி ( CPIO) தெரிவித்துள்ளதாக லைவ் லா கூறுகிறது.

மோசமடைந்து வரும் வரவர ராவின் உடல்நிலை ; கண்டுகொள்ளாத அரசு

அன்வய் நாயக் என்பவரின் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அர்னாப் கோசாமி, நவம்பர் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவருக்கு நவம்பர் 11 ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. தீபாவளிக்காக நீதிமன்ற விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நாளில், அர்னாபுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

மற்றொருபுறம், பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் கிழக்கு டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்கள், செயற்பாட்டாளர்களுக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்