Aran Sei

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் – இன்று விசாரணைக்கு எடுக்கிறது உச்ச நீதிமன்றம்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தாக்கல் செய்த புதிய ஆவணங்களை பரிசீலிக்க தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டுள்ளதையடுத்து, தமிழ்நாடு மற்றும் கேரளா இடையேயான முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கின் விசாரணை இன்று (மார்ச் 23) நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பெரியாற்றின் மீது 1895ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது. 126 ஆண்டுகள் பழமையான இந்த அணை தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வரும் நிலையில், அணையின் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை: முதல்வர்களின் கூட்டத்தில் ஒருமித்த முடிவு எடுக்கப்படுமென கேரள அரசு நம்பிக்கை

இந்நிலையில், நேற்று (மார்ச் 22), இரு மாநிலங்களுக்கு இடையேயான வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை மார்ச் 23ஆம் தேதி நடக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம், “அணையின் நீர் திறப்பு உள்ளிட்ட நீர் மேலாண்மை தொடர்பான விவகாரங்களுக்கு அணையின் மேற்பார்வைக் குழுவை அணுகுங்கள்” என்று இரு மாநிலங்களையும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது.

மேலும், அன்றாட நிர்வாகப் பிரச்சினைகளுக்காக எல்லாம் நீதிமன்றத்திற்கு வரக்கூடாது என்றும் இவ்விவகாரங்களை  மேற்பார்வைக் குழுவிடம் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்