Aran Sei

கடந்த காலங்களில் பாஜகவை ஆதரித்து தவறிழைத்து விட்டேன் – விவசாயிகள் போராட்டக் குழு தலைவர் நரேஷ் திகாய்த்

டந்த காலத்தில் பாஜகவை ஆதரித்து தவறு செய்திவிட்டதாக பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் நரேஷ் திகாய்த் கூறியிருப்பதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

முண்டர்வா பகுதியில் நடைபெற்ற மகாபஞ்சாயத்தில் கலந்து கொண்ட நரேஷ் திகாய்த், இவ்வாறு தெரிவித்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பாஜக தலைவர்களுடனான அனைத்து உறவுகளையும் ரத்து செய்ய வேண்டும், அவர்களை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கக் கூடாது எனப் பேசியுள்ள நரேஷ் திகாய்த், “இன்றைக்கு அரசாங்கம் விவசாயிகளுடன் மோதியுள்ளது. நாங்கள் பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்க வேண்டும் என வேண்டுவதோடு, எங்கள் பயிர்களுக்குரிய விலை வழங்கப்பட்டு, இந்த மண் காப்பாற்றப்படுவதை விரும்புகிறோம்” எனக் கூறியதாக தி வயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

சவுதி பத்திரிக்கையாளரை கொலை செய்ய சவுதி  இளவரசர் ஒப்புதல் அளித்துள்ளார் – அமெரிக்க உளவுத்துறை அறிக்கை

விவசாயிகள் கடின உழைப்பாளிகள், புத்திசாலிகள் எனக் கூறிய திகாய்த், “நாங்கள் இந்த போராட்டத்தை கிழக்கில் இருந்து மேற்கு வரை முறையாக விரிவுபடுத்துவோம். எங்களுக்கு யாருடனும் பகைமை இல்லை, ஆனால் யாரெனும் தவறு செய்தால், நாங்கள் நிச்சயமாக அவர்களை திருத்துவோம்” என கூறியதாகவும், ”2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தால் கரும்பு விலை குவிண்டாலுக்கு 450 ரூபாயாக நிர்ணயிக்கப்படும் என வாக்குறுதி அளித்த மோடி, ஆட்சிக்கு வந்த 7 ஆண்டுகள் ஆகியும் அதை நிறைவேற்றவில்லை” எனக் குற்றம்சாட்டியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சியில் இதுவரை பெட்ரோலின் விலை லிட்டருக்கு 55 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 45 ரூபாயும் உயர்ந்திருந்திருக்கும் நிலையில், கரும்பின் விலை உயரவில்லை எனக் குற்றம்சாட்டிய நரேஷ் திகாத், “இது போன்ற சூழ்நிலையில் விவசாயம் எவ்வாறு நடைபெறும்? இந்த அரசாங்கம் விவசாயிகளை அழிக்க வளைந்து கொடுக்கிறது. டீசல் மற்றும் பெட்ரோல் விலை அதிகரித்திருக்கும் நிலையில், அரசாங்கம் ஏன் எங்களுக்கு மானியம் வழங்கவில்லை? டீசல் மற்றும் பெட்ரோலுக்கு வரியாக அரசு ரூ.40 வசூலிக்கிறது. விவசாயிகளுக்காக அந்த  வரியில் தலா ரூ.10 குறைக்க மத்திய  மாநில அரசுகளால் முடியாதா? ” என திகாய்த் கேள்வி எழுப்பியிருப்பதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

சத்திஸ்கர் விவசாயிகள் மாநிலமா அல்லது விவசாயிகளைக் கொலை செய்யும் மாநிலமா ? – பாஜக கேள்வி

நாடாளுமன்றத்தில் விவசாயிகளை அந்தோலன்ஜீவி என பேசியதன் மூலம், விவசாயிகளை அவமதித்ததோடு, காயப்படுத்தியிருக்கிறார் மோடி என விமர்சித்த நரேஷ் திகாத், ”நாங்கள் செய்த தவறு என்ன? நாங்கள் இந்த நாட்டை வேளாண்மையில் தன்னிறைவு அடையச் செய்திருக்கிறோம். குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டத்தை மட்டுமே கேட்கிறோம். அனைவருக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலையை கட்டாயமாக்குங்கள். விவசாயத்தையும், நிலத்தையும் காப்பாற்றுவதற்கு மட்டுமே எங்கள் போராட்டம்” எனத் திகாய்த் பேசியிருப்பதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்