Aran Sei

‘முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை மாற்ற தேவையில்லை’- கண்காணிப்புக் குழு பரிந்துரை

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் கண்காணிப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது.

நேற்று(அக்டோபர் 27), இதுதொடர்பான வழக்கு, நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, கண்காணிப்புக் குழுவின் சார்பில் ஆஜரான கூடுதல் அரசுத்தரப்பு வழக்கறிஞர் ஐஸ்வர்யா பாடி, கேரள மாநில அரசு குழுவின் கருத்தை ஏற்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்று(அக்டோபர் 27) அணையின் நீர்மட்டம் 137.6 அடியாக இருந்ததாக தமிழ்நாடு தெரிவித்துள்ளது. அணையில் 139 அடிக்கு மேல் தண்ணீரை தேக்கி வைக்க அனுமதிக்கக் கூடாது என்று அணையை நிர்வகிக்கும் தமிழ்நாட்டிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கேரளா அரசு கோரியுள்ளது.

புதிய அணை கட்டும் கேரளா : போராட்டத்தை அறிவித்த தமிழக விவசாயிகள்

அத்தோடு, அணையின் நீர் மட்டம் அதிகரித்து, அதன் உபரிநீர் வெளியேற்றப்படும் போது வெள்ள அபாயம் உருவாகுவதோடு, கேரளாவில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் உயிருக்கு ஆபத்தையும் விளைவிக்கும் என்று கூறியுள்ளது.

கேரளா மாநில அரசு முல்லை பெரியார் விவகாரத்தை தேவையின்றி பெரிதுபடுத்துவதாக தமிழ்நாடு அரசு வாதிட்டுள்ளது. தற்போது, கேரள பகுதியில் மழை நின்று விட்டது என்றும் அதுமட்டுமின்றி, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள், அணையின் அதிகபட்ச நீர்மட்டத்தை 142 அடியாக நிர்ணயம் செய்திருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் இன்னும் 137 அடியாகதான் உள்ள நிலையில், நிலைமை மிகவும் அவசரமானதாக இல்லை என்றும் கண்காணிப்பு குழுவின் அறிக்கைக்கு நாளைக்குள்(அக்டோபர் 28) பதிலளிக்க வேண்டும் என்றும் கேரளா அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இருமாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படும்’- பினராயி விஜயனுக்கு ஸ்டாலின் கடிதம்

அதைத்தொடர்ந்து, கண்காணிப்பு குழுவின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள, கேரள அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, 2017 தொடங்கி 2019 வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கனமழை மற்றும் வெள்ளத்தை கேரள மாநிலம் கண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அணையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய உபரிநீர் அதிகமானால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் 2018-ல் கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, அணையின் நீர்மட்டம் 139 அடிக்கு மேல் செல்லக்கூடாது என அந்தாண்டு ஆகஸ்ட் 24 ஆம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது என்றும் கேரள தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பாக வாதாடியுள்ள மூத்த வழக்கறிஞர் சேகர் நபாடே, “நீர்மட்டம் 137.6 அடியாக உள்ளது. கேரளாவில் மழை குறைந்துள்ளது. ஆனால், கேரளாவில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தவறான பரப்புரைகள் நடந்து வருகின்றன. அப்பரப்புரைகள் அனைத்துமே தவறானவை என்று கேரள முதலமைச்சரே சட்டபேரவையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். இருந்தும், துர்வாய்ப்பாக இந்தப் பொய் பரப்புரைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

Source: The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்