Aran Sei

கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.30 கோடி நிதியுதவி – சன் டிவி குழுமம் அறிவிப்பு

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்க சன் டிவி குழுமம் ரூ.30 கோடி நிதியுதவி அளித்துள்ளது.

இதுகுறித்து, சன் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடந்து வரும் பல முன்னெடுப்புகளுக்கு இந்தப் பணம் செலவிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்திய செஞ்சிலுவை சங்கத்திற்கு 1 மில்லியன் டாலர் நிதியுதவி – சீன செஞ்சிலுவை சங்கம் அறிவிப்பு

மேலும், ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் முன்னெடுத்திற்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கும், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மருந்துகள் மற்றும் இதர உதவிகள் புரியும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றும் வகையில் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதுமட்டுமல்லாது, “எங்களின் அனைத்து ஊடகங்களின் வழியாக இந்தியா மற்றும் உலகம் முழுதும் உள்ள லட்சக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்” என்று சன் டிவி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்