Aran Sei

இஸ்லாமிய பெண்களை இழிவுப்படுத்தும் இந்துத்துவ கும்பல்: பெண்கள் அமைப்புகள் கண்டனம்

credits : dna india

மூக அவலங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் இஸ்லாமிய பெண்களைக் குறி வைத்து, அவர்களை இழிவுப்படுத்தும் வகையில் செயல்பட்ட சல்லி டீல்ஸ் எனும் செயலியைக் கண்டித்து, பல்வேறு பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக, கிட் ஹப் (Git hub) எனும் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வந்த சல்லி டீல்ஸ் (Sulli Deals) எனும் செயலி, இஸ்லாமிய மாணவர்கள், செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட 80 க்கும் மேற்பட்டவர்களின் புகைப்படங்களைத் தன்னுடைய இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்து, அவர்களின் புகைபடத்தை ஏலத்தில் விட்டுள்ளது. இதனால் அப்பெண்கள் கடும் அச்சுறுத்தலுக்கும் சீண்டலுக்கும் உள்ளாகியுள்ளனர்.

தீவிர வலது சாரி இந்துத்துவவாதிகள் இஸ்லாமிய பெண்களை இழிவுப்படுத்தும் குறிப்பிட ”சல்லி” எனும் வார்த்தையைப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

இதைக் கண்டித்து சமூக வலைதளங்களில் பெண்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்த நிலையில், கிட் ஹப் நிறுவனம் சல்லி டீல்ஸ் செயலியை முடக்கியது.

சிறுநீர் அருந்தச்சொல்லி இளைஞரை துன்புறுத்திய உதவி ஆய்வாளர் – நடவடிக்கை எடுக்கக் கோரி தலித் அமைப்புகள் போராட்டம்

டெல்லி பெண்கள் ஆணையம் மற்றும் தேசிய பெண்கள் ஆணையம் கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையில், கடந்த ஜுலை 8 ஆம் தேதி முதல் இந்தச் சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. சம்பவம் நடந்து ஒரு வாரத்தைக் கடந்த நிலையில், அந்தச் செயலியைப் பயன்படுத்திய ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், இஸ்லாமிய பெண்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தைக் கண்டித்து 800க்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

உ.பி தேர்தல் வன்முறை: ’பாஜகவினர் பெண்களின் புடவையை இழுத்து, தாக்குதல் நடத்தியது பிரதமருக்கு தெரியாதா?’ – பிரியங்கா காந்தி கேள்வி

அதில், ”இந்தச் சம்பவம் என்பது, ஒரு ஜனநாயக நாட்டின் குடிமகளாக, அரசியல் சார்ந்து பேசுகின்ற, அரசியலில் பங்கேற்கின்ற பெண்களைக் குறி வைத்து செயல்பட்ட திட்டமிட்ட வெறுப்பு பிரச்சாரம். இஸ்லாமிய பெண்கள அச்சுறுத்தி, அவர்களை மைய நீரோட்டத்தில் இருந்து விலக்கி, அவர்களின்  கருத்துரிமையை முடக்கும் செயல். குடியுரிமை திருத்தச் சட்டத்தை முன்னின்று நடத்திய பல்வேறு இஸ்லாமிய பெண்களின் தலைமை பண்பை ஏற்றுக் கொள்ள முடியாத வலதுசாரி இந்து ஆண்கள், இணையத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி பொது சமூகத்தில் நடக்கும் போராட்டங்களில் இருந்து இஸ்லாமிய பெண்களை அந்நியப்படுத்த முற்படுத்தும் செயல்” என்று தெரிவித்துள்ளனர்.

நியமிக்கப்படாத பட்டியல், பழங்குடி ஆணையத்தின் பொறுப்புகள் – வன்கொடுமை வழக்குகளை நீர்த்துப் போக செய்கிறதா ஒன்றிய அரசு?

கடந்த ஜுலை 4 ஆம் தேதி, டெல்லியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பட்டவ்டி எனும் பகுதியில் நடந்த கூட்டத்தில், தீவிர இந்துத்துவ வலதுசாரி ஆண் ஒருவர் இஸ்லாமிய பெண்களை கடத்த வேண்டும் என கூறியதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்