Aran Sei

காவல்துறையால் கைது செய்யப்பட்டவர் தற்கொலை – மரணத்தில் சந்தேகம் இருப்பதாக் குடும்பத்தினர் குற்றச்சாட்டு

பாலியல் மோசடி வழக்கில் கைதானதால் தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் தற்கொலைக்குறிப்பில் குறிப்பிடப்பட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படாதென லக்னோ காவல்துறை தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 13 அன்று அழகு நிலையம் ஒன்றில் நடந்த சோதனையில் பாலியல் மோசடி ஈடுபட்டதாக நான்கு ஆண்களும், ஐந்து பெண்களும் கைது செய்யப்பட்டனர். இதில் கைது செய்யப்பட்ட விஷால் சைனி என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘என் கடைசி ஆசையாக விவசாய சட்டங்களை நீக்குங்கள்’ – தற்கொலைக்கு முன் விவசாயியின் உருக்கமான கடிதம்

மேலும், அவரது தற்கொலைக் கடிதத்தில் தனது மரணத்திற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரச்சி சிங்தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

கடந்த பிப்ரவரி 13 அன்று பாலியல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சைனி, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த மார்ச் 10 அன்று சைனி இறந்த நிலையில் ரயில்வே தண்டவாளம் அருகில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அப்போது கண்டெடுக்கப்பட்ட அவரது உடலுக்கு அருகில் தற்கொலைக்கான கடிதம் கைப்பற்றப்பட்டதாகவும்  தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சாக்கடையை சுத்தம் செய்ய நிர்பந்திக்கப்பட்ட தொழிலாளர் – மனம் உடைந்து தற்கொலை

விஷால் சைனியின் தற்கொலை கடிதத்தில், “பிரச்சி சிங்கினால் எனது தன்மானத்திற்கு ஊறு நேர்ந்துவிட்டது, எனது குடும்பம், சமூகம் முன்பு வெட்கி தலைகுனிகிறேன்” என்று விஷால் சைனி குறிப்பிட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பிரச்சி சிங் தண்டிக்க படவில்லை என்றால் மேலும் பல அப்பாவிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று சைனி தற்கொலை கடிதத்தில் தெரிவித்துள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கின்றது.

இதுகுறித்து பதிலளித்துள்ள லக்னோ காவல்துறை ஆணையம், “சைனி மீது சட்டப்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டது, மேலும், அவர் குற்றத்தில் ஈடுபட்டதற்கான போதிய ஆதாரங்களும் உள்ளன” என்று கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஷால் சைனியின் தற்கொலைக் கடிதம் குறித்து காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி குறிப்பிடுகிறது

திக்ரி எல்லையில் விவசாயி தற்கொலை – விவசாயச் சட்டங்களை அரசு திரும்ப பெறாதததால்  விரக்தி

சைனியின் மரணம்குறித்து பேசிய காவல் ஆணையர் பிரச்சி சிங், சைனி குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரம் உள்ளதாகவும், தான் அப்போது அழகுநிலையத்தின் வரவேற்பறையில் அமர்ந்து கண்காணித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள சைனியின் தந்தை, “என்மகனை காவல்துறை கைது செய்தபோது அவன் உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்ததான்” என்று கூறியுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சைனியின் மரணத்திற்கு அரசு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் எனவும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் எனவும் சைனியின் குடும்பத்தார் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்