Aran Sei

தலைக்கவசம் அணியாதததால் வெயிலில் நிற்கவைக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் – தண்டனை விதித்த உதவிஆய்வாளர் பணியிடை நீக்கம்

டிசா மாநிலத்தில், தலைக்கவசம் அணியாத கர்ப்பிணி பெண்ணை, கடும் வெயிலில் நிற்கவைத்த காவல்துறை உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் மயூர்பான்ஜ் பகுதியில் உள்ள , உடலா மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக இருசக்கர வாகனத்தில் தன் கணவருடன்  சென்றுகொண்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவரை, போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் ரீனா பசேல் தடுத்து நிறுத்திச் சோதனையில் ஈடுபட்டுள்ளாரென அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கணவனிடமிருந்து பிரிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் – காப்பகத்தில் இருந்து விடுதலை

அப்போது அந்தப் பெண்ணின் கணவர் தலைக்கவசம் அணிந்திருந்த  நிலையில் தலைக்கவசம் கவசம் அணியாதிருந்த அந்தப் கர்ப்பிணி பெண்ணுக்கு அபராதம் விதித்ததாகவும், அதை கர்ப்பிணி பெண்ணின் கணவரைக் காவல் நிலையத்திற்கே சென்று உடனே செலுத்தி வரவேண்டும் எனச் சொன்னதாகவும் என்.டி.டி.வி செய்தி கூறுகிறது.

`உள்ளே கர்ப்பிணிப் பெண்; உயிரைக் காப்பாற்றுங்கள்’ – வேல் யாத்திரையால் சிக்கிய ஆம்புலன்ஸ்

மேலும் ,அதுவரை அந்தப் பெண்ணைச் சம்பவ இடத்திலேயே நிற்க வேண்டும் எனக்கூறிய நிலையில் கடும் வெயிலில் சாலையிலேயே நின்ற அந்தப் பெண், கணவர் வரத் தாமதமானதால் 3 கிலோமீட்டர் தூரம் வெயிலில் நடந்தே சென்றதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவம்குறித்து அறிந்த மயூர்பான்ஜ் மாவட்டக்காவல் கண்காணிப்பாளர் , உதவி ஆய்வாளர் ரீனா பசேல்லை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக என்.டி.டி.வி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு டெல்லி வெறுப்பு கலவரம் – தம் வாழ்வையும் பிறர் வாழ்வையும் மீட்ட பாதிக்கப்பட்ட பெண்கள்

இந்தச் சம்பவம், தொடர்பாக பேசிய, அந்தப் பெண்ணின் கணவர், ” என் மனைவியின் உடல்நிலை காரணமாகத் தலைக்கவசம் அணிய இயலவில்லை என்று நாங்கள் கூறியதை பணியில் இருந்த உதவி ஆய்வாளர் கண்டுகொள்ளவே இல்லை ” என்று கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்