Aran Sei

அஞ்சல் பணி நியமனத்தில் மாநில மொழி அறிவை உறுதி செய்ய வேண்டும் – ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் வேண்டுகோள்

ஞ்சல் பணி நியமன முறையில் மாற்றம் செய்து மாநில மொழி அறிவை உறுதி செய்ய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 07, 2021 அன்று ஒன்றிய அரசின் தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்குக் கடிதம் எழுதி இருந்ததைக்  குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தபால் துறையில் மக்கள் தொடர்பு நிலையில் உள்ள அலுவலர்கள் நியமனங்களுக்கு நடைபெறும் தேர்வுகளில் மாநில மொழி தேர்ச்சிக்கு எந்த ஏற்பாடும் இல்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது,அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர், ஆய்வாளர்கள் ஆகிய பணிகளைச் செய்யும் ஊழியர்களுக்கான தேர்வுகளை அலுவலர் நியமன ஆணையம் ( Staff Selection Commission) நடத்தும்போது தமிழில் அவர்கள் உரையாடக் கூடியவர்களா என்று கூட சோதித்துப் பார்ப்பதில்லை. இவர்களிடம் சேவை நாடி வரும் பொது மக்கள் திண்டாடுகிறார்கள் என்றும்  கூறியுள்ளார்.
மேலும், இவர்களுக்கு உள்ளூர் மொழிகள் தெரியாவிட்டால் எப்படி பணி புரிய முடியும்? சேவைகள்தான் சிரமத்திற்கு ஆளாகும் என்றும்
இப்பணி நியமனங்கள் அகில இந்திய அளவில் மேற்கொள்ளப்படுவது என்றாலும் எனது கோரிக்கை அஞ்சல் இயக்குனரகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக “இந்தியா போஸ்ட்” பதில் அளித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, பாதங்களின் அளவுக்குச் செருப்பு இருக்க வேண்டுமேயொழிய, செருப்புக்கு தகுந்தாற் போல பாதங்களைச் செதுக்க முடியாது. மொழி தெரியாதவர்களிடம் மக்கள் எப்படி உரையாடுவது? சேவை பெறுவது? மக்கள் நலனே முக்கியம்.  மாநில மொழித் தேர்ச்சிக்கு வழி செய்யுங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்