Aran Sei

‘தமிழக தேர்வர்களுக்கு இந்தியில் பயிற்சியா?’- நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்திற்கு சு.வெங்கடேசன் கடிதம்

மிழக தேர்வர்களுக்கு இந்தியில் பயிற்சியா என்று கேள்வி எழுப்பி, நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவன தலைவருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து, தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர்,  நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவன தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தையும் அத்துடன் இணைத்துள்ளார். அவ்வறிக்கையில், “பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் 300 நிர்வாக அலுவலர் (பொது) பணியிடங்களை நிரப்பவுள்ளது. இதற்கான அறிவிக்கையை ஆகஸ்டு 24, 2021 அன்று வெளியிட்டது. இரண்டு கட்டங்களாக இந்தத் தேர்வு நடைபெறும். முதல் கட்டத்தேர்வு அக்டோபர் 16, 2021 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

‘பிஎம் கேர் நிதி யாருடைய நிதி? ஒன்றிய அரசு விளக்கம் தருமா?’- சு.வெங்கடேசன் கேள்வி

“விண்ணப்பித்துள்ள ஓபிசி, எஸ்சி, எஸ்டி தேர்வர்களுக்கு தேர்வுக்கு முன்பாக பயிற்சி தரப்படும். முக்கியமான மையங்களில் இந்த வகுப்புகள் நடைபெறும். இந்த முறை ஆன்லைனில் இதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன. மிகவும் ஆர்வத்தோடு தமிழகத்திலிருந்து விண்ணப்பித்திருந்த தேர்வர்கள் இதில் பங்கேற்றனர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“முதல் நாளிலேயே இவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்தி வழியில்தான் பயிற்சி தரத் துவங்கினர். அக்டோபர் 4 ஆம் தேதி துவங்கிய இந்தப் பயிற்சி தற்போது நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இந்தியில்தான் வகுப்புகள் நடக்கின்றன. இது விண்ணப்பித்துள்ள ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்களுக்கு எந்தவித பலனையும் தருவதாக இல்லை.” என்று சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதில் கொடுமை என்னவென்றால், ஆங்கில மொழித்தாளுக்கான பயிற்சி வகுப்பையும் அவர்கள் இந்தியில்தான் நடத்தியிருக்கிறார்கள் என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘அஞ்சல் துறை படிவத்தில் தமிழ் அகற்றம்; மாற்றங்களை செய்க’ – பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் கடிதம்

“ஆகவே, தேர்வுக்கு முன்பாக, ஒரு குறுகிய காலப் பயிற்சி ஒன்றை தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு ஏற்பாடு செய்திட வேண்டும். அதோடு, தேர்வர்களுக்குப் புரியும் மொழியில் நடத்திட வேண்டும் என்றும், வரும் காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் நேராவண்ணம் உறுதி செய்திட வேண்டும் என்று அக்கடிதத்தில் கோரியுள்ளேன்.” என்று நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவன தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்  குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்