Aran Sei

வந்தனாவின் வெற்றி தேசத்தின் வெற்றி- நேரில் சென்று சு.வெங்கடேசன் வாழ்த்து

ந்திய மகளிர் ஹாக்கி அணியின் வீராங்கனை வந்தனா கட்டரியாவை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில்,”ஒலிம்பிக் விளையாட்டுகள் மூலமாக சர்வதேச அரங்கில் இந்திய கொடியை பறக்க விட்டு திரும்பியிருக்கிறார்கள் ஹாக்கி பெண் வீரர்கள். வெற்றி ஹாக்கி பெண் வீரர்கள் வாய்ப்பை இழந்திருந்தாலும், இதயங்களை அள்ளி வந்திருக்கிறார்கள். இந்தியாவுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றுத்தர உழைத்த பெண்களில் ஒருவருக்கு இங்கு கிடைத்த வெகுமதி சாதிரீதியான இழிவு” என்று கூறியுள்ளார்.

மேலும், வந்தனா கட்டாரியா – இந்தியாவின் ஒலிம்பிக் நம்பிக்கை. தென்னாப்பிரிக்காவுடனான போட்டியில் ஹாட்ரிக் அடித்த முதல் இந்திய பெண் என்றும்,  காலிறுதி போட்டியில் பங்கேற்கும் தகுதியை இந்தியா பெற வழி வகுத்த ஆட்டம் அது   என்றும் சு.வெங்கடேசன் குறிபிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது ,ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சியின் பொருட்டு, தந்தையின் இறுதி சடங்குக்கு செல்லாமல் விட்ட வந்தனாவுக்கு கிடைத்ததெல்லாம் சாதி துவேஷம். அவரைப் போன்ற தலித் பெண்கள் இடம் பெற்றதால்தான் தோல்வி என்று கொக்கரித்தது ஒரு கூட்டம் என்றும்  அவர் தெரிவித்துள்ளார்

இந்நிலையில், “குடும்பத்தைவிட நாடு முக்கியம் என்று நினைத்துப் பயிற்சியில் பங்கெடுத்த வந்தனா ஒரு பக்கம், தேசத்தைவிட சாதி உயர்வானது என்று நினைத்து தோல்வியை வெடி வைத்து கொண்டாடிய கீழ்த்தரமான கூட்டம் இன்னொரு பக்கம். இதில் இந்தியா எந்த பக்கம் நிற்க வேண்டும்? “என்றும் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே, “குற்றவாளிகளை கைது செய்ததோடு மட்டும் நிற்காமல், இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த உங்கள் பக்கம்தான் நிற்கிறோம் என்கிற வலிமையான செய்தியை இந்தியா சொல்லியிருக்க வேண்டாமா?விளையாட்டுத்துறை அமைச்சர் நேரில் செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது,அவர் இந்தியாவுக்கு தேடித்தந்த மகத்தான பெருமைக்கு நன்றி சொல்லி திரும்பியிருக்கிறேன் என்றும், அவருடனான உரையாடல் மிகுந்த மனநிறைவை தந்தது. அவர் இன்னும் பெரிய உச்சங்களை தொடுவார் என்கிற நம்பிக்கையைத் தந்தது என்றும் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மேலும், “வந்தனா, இந்தியாவின் மகள்.அவரது வெற்றி இந்தத் தேசத்தின் வெற்றி.இதுதான் வந்தனாவுக்கு நான் சொன்ன சேதி.வாழ்த்துகள் வந்தனா!காலம் உங்கள் கைகளில்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய பதிவுகள்:

கடந்த மாதம் 31,637 கணக்குகள் முடக்கம் – புகார்களின் மீது ட்விட்டர் நிர்வாகம் நடவடிக்கை

‘தகுதிப் போட்டியில் தேர்வாகியும் பெண் என்பதால் புறக்கணிப்பா?’ – வீராங்கனை சமீஹா பர்வீன் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

ஆப்கானிஸ்தான் பகுதிகளைக் கைப்பற்றி வரும் தாலிபான்- அதிகாரத்தை பகிர்ந்துக் கொள்ள அரசு அழைப்பு

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்