Aran Sei

கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை உடனே இறக்குமதி செய்ய வேண்டும்- சுகாதாரத்துறை அமைச்சருக்கு சு. வெங்கடேசன் வேண்டுகோள்

ருப்புப் பூஞ்சை நோய்க்கான மருந்தை உடனே இறக்குமதி செய்ய வேண்டுமெனக் கோரி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்கு, மதுரை  நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

“தடுப்பூசி தாருங்கள், நாங்கள் தன்னார்வலர்களை தருகிறோம்” – சுகாதாரத்துறைக்கு சு.வெங்கடேசன் கடிதம்

அந்த கடிதத்தில் , கொரோனா தொற்று அதிகரித்து வரும் சவாலை எதிர்கொண்டு வரும் போதே, மற்றுமொரு சவாலாக கருப்பு பூஞ்சை நோய் மக்களிடயே தாண்டவமாட தொடங்கி உள்ளதாகவும், கொரோனா பெருந்தொற்று அளவிற்கு கருப்பு பூஞ்சை நோயாளர்களின் எண்ணிக்கை இல்லாவிடினும், இந்த பூஞ்சையின் வீரியம் மற்றும் நோயின் தீவிரத்தன்மை, நோயாளர்களில் பலருக்கு உயிரிழப்புகளை அதிவிரைவில்  ஏற்படுத்திவிடும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும்,மதுரையின் அரவிந்த் கண் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் வெங்கடேஷ் பிரஜ்னா, மற்றும் டெல்லி கங்காராம் கண் மருத்துவமனையின்,தலைமை கண் மருத்துவர்,பத்மஸ்ரீ அசோக் குரோவர் ஆகியோரிடம் ஆலோசித்த போது இதற்கு தேவையான  மருந்து ‘லிபோசோமல் அம்போடேரிசின் பி’ என்பது தெரிய வந்ததாகவும் அவரது கடிதத்தில் சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த மருந்து இந்தியாவில் குறைந்த அளவில் கிடைப்பதற்கு அரிதாகவும் உள்ளதாகவும், இப்போது இருக்கும் காலக்கெடுவில்  உள்நாட்டு மருத்துவ நிறுவனங்கள் அத்தனை விரைவில் இந்த மருந்தை உற்பத்தி செய்வது கடினம் என்பதையும் உணர முடிவதாகவும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

“தடுப்பூசி தாருங்கள், நாங்கள் தன்னார்வலர்களை தருகிறோம்” – சுகாதாரத்துறைக்கு சு.வெங்கடேசன் கடிதம்

எனவே,  மேலை நாடுகளில் எளிதில் தற்போது கிடைக்கக் கூடிய இந்த உயிர்காப்பான் மருந்தான ‘லிப்போசோமல் அம்போடேரிசின் பி’ மருந்தை, ஒன்றிய அரசு  உடனடியாக இறக்குமதி செய்யவேண்டுமென கோரிக்கை வைப்பதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்கு, மதுரை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்