Aran Sei

கடைசி தீர்வு ஊரடங்கு என்று அறிவுரை கூறும் பிரதமரே; முதல் தீர்வான தடுப்பூசியை முதலில் முறையாகச் செயல்படுத்துங்கள்- சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

டைசி தீர்வு ஊரடங்கு என்று அறிவுரை கூறும் பிரதமரே, முதல் தீர்வான தடுப்பூசியை முதலில் முறையாகச் செயல்படுத்துங்கள் என்று மத்திய அரசுக்கு மதுரை நாடளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சரான ஹர்ஷவர்த்தனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

கொரோனா  இரண்டாவது அலை நாடு முழுதும் வீசி வருகிறது. தேசத்தின் தலைநகரமான டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் நெஞ்சைப் பிளப்பதாக உள்ளது. அதுமட்டுமல்லாது, நாடு முழுமையுமுள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பானது அபாயகரமான அளவிற்கு வீழ்ந்துள்ளது.

கொரோனா போராளிகள் காப்பீடு: கை தட்டிய அரசே கை விரிக்கலாமா? – சு.வெங்கடேசன் கேள்வி

மேலும், சென்னை மருத்துவமனைகளிலும் இப்பிரச்சினை எழுந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. டெல்லி உயர்நீதி மன்றம் “மனித உயிர்கள் முக்கியமில்லையா? பிச்சை எடுங்கள்… கடன் வாங்குங்கள்… திருடக் கூட செய்யுங்கள்… இது தேசத்தின் அவசர நிலைக் காலம்” என்று மத்திய அரசைப் பார்த்துக் கூறியிருக்கிறது. பெரும் கார்ப்பரேட்டுகள் மீது வரி போடு என்றும் கனம் நீதிபதிகள் சேர்த்து சொல்லியிருக்கலாம்.

அதுமட்டுமல்லாது, மாடல் மாநிலம் என போற்றப்பட்ட குஜராத் கதைகள் கண்ணீரை வரவழைக்கின்றன. சூரத் நகரில் உள்ள மூன்று அடக்கத் இடங்களில் தினமும் 300 பிணங்கள் சராசரியாகக் குவிகின்றன. 6 மணி நேரம் முதல் 10 மணி நேரம்வரை அடக்கத்திற்காக அப்பிணங்கள் நீண்ட நேரமாக காத்திருக்கின்றன. இறந்த பின்னர் நாகரிகமான அடக்கம் கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை என சு.வெங்கடேசன் வருத்தம் தெரிவித்துள்ள

மதுரையில் எய்ம்ஸ் கட்ட ஜப்பான் அரசிடம் கடன் பெறும் இந்தியா: அமைச்சரவையின் ஒப்புதல் பெறாமல் கையெழுத்தானது எப்படி? – சு.வெங்கடேசன் கேள்வி

நேற்று மட்டும் தமிழகத்தில் 12652 புதிய தொற்றுக்கள், 59 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. சென்னை உயர் நீதி மன்றத்தில் நிலைமை “கட்டுக்குள் இல்லை” என அரசு தெரிவித்த செய்தி பெரும் பதட்டத்தையும், நடுக்கத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வலுவான தலையீட்டின் வாயிலாக மக்களுக்கு நம்பிக்கையூட்டும் பெரும் கடமை அரசின் முன்பு உள்ளது. ஆனால் “சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அறிவித்துள்ள தடுப்பூசி விலைகளைப் பார்த்து மொத்த தேசமும் அதிர்ந்து போயுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் அரசாங்கம் “ஒரு தேசம்; ஒரு ரேசன் கார்டு”, “ஒரு தேசம்; ஒரு தேர்தல்,  ஒரு வரி, ஒரு சந்தை” எனப் பேசுகிறது. அவையெல்லாம் மக்களுக்கும் தேசத்திற்கும் எதிரானவை. ஆனால் கோவிட் தடுப்பூசிக்கு “ஒரு தேசம்; மூன்று விலைகள், இது மக்களுக்குப் பெரும் அடி. அவர்களைச் சந்தையின் கருணைக்கு விட்டு விட்டு அரசாங்கம் ஒதுங்கிக் கொண்டுள்ளது

அகழாய்வுகளுக்கு அனுமதி வழங்கும் ஆலோசனைக் குழுவில் தமிழர்கள் புறக்கணிப்பு – சு.வெங்கடேசன் கண்டனம்

இது அரசியல் சாசனப்படி செல்லத்தக்கதா என்ற கேள்வி கூட எழுகிறது. இந்திய நாடு “மாநிலங்களின் ஒன்றியம்” எனும்போது எப்படி இரு வேறுபட்ட விலைகளை மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் நிர்ணயிக்க முடியும்? என்றும் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தற்போது அரசாங்கம் 18 வயதுக்கு மேற்பட்டோரும் தடுப்பூசி போடலாம் என்று அறிவித்துள்ளது. ஆகவே தடுப்பூசிகளுக்கான தேவை இன்னும் சில நாட்களில் செங்குத்தாக உயரப் போகிறது. இந்நிலையில் தடுப்பூசி சந்தையைத் தனியார்க்கு திறந்து விடுவதால் இன்னல்களுக்கு ஆளாகப் போவது, இந்தத் தேசத்தின் எளிய மக்கள்தான்.

அதுமட்டுமின்றி மாநில அரசுகள் ஏற்கெனவே கடுமையான நிதி நெருக்கடியில், கடன் சுமையில் தத்தளிக்கும் நிலையில், இந்தப் புதிய விலைக் கொள்கை இன்னும் அதிகமான சுமையை மாநிலங்களின் முதுகுகளில் ஏற்றுவதாக உள்ளது என்றும் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

‘அறுவை சிகிச்சை வெற்றி, ஆனால் நோயாளி காலியா?’ – வங்கி ஊழியர் தேர்வுக் கழகத்திற்கு சு.வெங்கடேசன் கேள்வி

ஆகவே மத்திய அரசாங்கம் கீழ்க்காணும் நடவடிக்கைகளை எந்தவொரு கால தாமதமுமின்றி விரைவில் மேற்கொள்ள வேண்டுகிறேன்.

* புதிய விலைக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும். தனியாரை தடுப்பூசிக்குச் சந்தையைத் திறந்து விடுவது கூடாது.

* தடுப்பூசி அளிப்பிற்காக, செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோ, நீலகிரி பாஸ்டியர் ஆய்வகம், சென்னையின் பி.சி.ஜி ஆய்வகம், சிம்லாவின் மத்திய மருந்து ஆராய்ச்சி மையம் போன்ற அரசு மருத்துவ நிறுவனங்கள்மூலம் உற்பத்தி அதிகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

* ஏற்றுமதி முறையாக நெறிப்படுத்தப்பட்டு உள்நாட்டுத் தேவை சற்றும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* “கட்டாய உரிமம்” வழங்கப்படுவதை உறுதி செய்து எல்லோருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

* அமெரிக்க ஐக்கிய நாடுகள், மருத்துவ துணைப் பொருட்கள்மீது விதித்துள்ள தடையை நீக்க மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்.

* மத்திய அரசே தடுப்பூசிக்கான முழு செலவை ஏற்பதோடு எல்லோருக்கும் கட்டணமில்லா தடுப்பூசியை உறுதி செய்ய வேண்டும்.

தமிழ் தெரிந்த மூன்று நீதிபதிகளை சென்னை லேபர் கோர்ட்டில் நியமிக்க வேண்டும்’ – சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

“ஊரடங்கு” என்பது தீர்வுகளுக்கான கடைசி தெரிவாக இருக்க வேண்டுமென்று நமது பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். எனது வேண்டுகோள் இதுதான். தடுப்பூசி என்பது தீர்வுக்கான முதல் தெரிவு. அதற்கான கவனத்தை அரசாங்கம் செலுத்த வேண்டாமா?

மத்திய அரசு இதற்கான நேர்மறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எண்ணுகிறேன்.

மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பதில் அளிப்பார் என்று நம்புகிறேன் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்