Aran Sei

“தடுப்பூசி தாருங்கள், நாங்கள் தன்னார்வலர்களை தருகிறோம்” – சுகாதாரத்துறைக்கு சு.வெங்கடேசன் கடிதம்

னது தொகுதியில் உள்ள இளைஞர்களுக்கு எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி வாயிலாக கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படுவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அதன் வழியாக அவர்களை கோவிட் எதிர்ப்பு களப் பணியில் தன்னார்வலர்களாக  பயன்படுத்த முடியும் என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (மே 13), மத்திய சுகாதார செயலாளருக்கு சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில், “கோவிட் பேரிடர் இரண்டாம் அலை 18-45 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை அதிகமாகப் பாதிக்கும் என பலரும் எச்சரித்து வருகின்றனர். இதை மனதில் கொண்டு ஒன்றிய அரசாங்கம் இந்த வயது அடைப்பிற்குள் வரக் கூடிய அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி கிடைப்பதை  உறுதி செய்யும் என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “களத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தவிர குடிமைச் சமூகமும் இந்த நிவாரணப் பணியில் ஈடுபடுத்த வேண்டும், அரசின் முயற்சிகளுக்கு துணை புரியச் செய்ய வேண்டுமென கருதுகிறேன். அதுவும் சுகாதாரப் பணியாளர்கள், அரசின் முன்களப் பணியாளர்கள் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார்கள் என்ற செய்தி வந்துள்ள சூழ்நிலையில் இது முக்கியமானது. ஓராண்டு நீண்ட பேரிடர் பணியில் இத்தகைய மன உளைச்சல் இயல்பானதுதான்.” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘தமிழ் மக்களின் உயிர்கள் முக்கியமில்லையா’ – ஆக்சிஜன் ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டதாக சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

“ஒன்றிய, மாநில அரசின் பணிகளில் உதவ, முன்னெச்சரிக்கை மற்றும் கோவிட் வழிகாட்டல்கள் குறித்த செய்திகளை மக்களிடம் சேர்க்க, விழிப்புணர்வை உருவாக்க என்னுடைய மதுரை நாடாளுமன்ற தொகுதியில் தன்னார்வ இளைஞர்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளேன். அவர்கள் இரண்டாம் நிலை சுகாதார ஆர்வலர் படையாக செயல்படுவார்கள்” என்று தனது திட்டத்தை பற்றி சு.வெங்கடேசன் விளக்கியுள்ளார்.

கடைசி தீர்வு ஊரடங்கு என்று அறிவுரை கூறும் பிரதமரே; முதல் தீர்வான தடுப்பூசியை முதலில் முறையாகச் செயல்படுத்துங்கள்- சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

“இதன் மீது உங்களின் ஒத்துழைப்பை நாடுகிறேன். கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை எனது தொகுதியில் உள்ள இளைஞர்களுக்கு எனது எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி வாயிலாக முன்னுரிமை அளித்து வழங்கிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தனது கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

 

மதுரையில் எய்ம்ஸ் கட்ட ஜப்பான் அரசிடம் கடன் பெறும் இந்தியா: அமைச்சரவையின் ஒப்புதல் பெறாமல் கையெழுத்தானது எப்படி? – சு.வெங்கடேசன் கேள்வி

“அரசின் தற்போதைய கொள்கை வரம்பிற்குட்பட்டு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன். எனது தொகுதிக்கு போதுமான தடுப்பூசிகளை வழங்குங்கள். மேலே கூறிய மனித நேய சேவைக்கு அது பயன்படும். தன்னார்வ இளைஞர் 30000 பேருக்கு (ரூ 150 வீதம் ஒரு முறைக்கு) இரண்டு முறைக்கும் சேர்த்து எனது எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்குவேன். உங்களின் ஒப்புதல் கிடைத்தவுடன் இத் தொகை அனுப்பப்படுவதை உறுதி செய்வேன்.” என்று மத்திய சுகாதார செயலாளருக்கு சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்