Aran Sei

ஒன்றிய அரசின் தேர்வுகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழகம் – அணுசக்தி துறைக்கு சு.வெங்கடேசன் கடிதம்

ணுசக்தி துறையின் நிதிஉதவியுடன் கூடிய பயிற்சி வகை-1 பணி நியமன முதல்படித் தேர்வில் [Stipendary Trainee Category – I] தமிழகத்தில் தேர்வுமையம் இடம்பெறாதது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அணுசக்தித் துறைக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அணுசக்தி துறை தலைவர் டாக்டர் தினேஷ் ஸ்ரீ வஸ்தவாவுக்கு அவர் எழுதியுள்ளக் கடிதத்தில், இத்தேர்வு எழுத நாடு முழுவதும் 6 மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஒரு மையம் கூட தமிழ்நாட்டில் இடம்பெறாததால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தேர்வர்கள் பெங்களூருவுக்கு சென்று தேர்வெழுத வேண்டிய நிலை உள்ளது என்று சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை உடனே இறக்குமதி செய்ய வேண்டும்- சுகாதாரத்துறை அமைச்சருக்கு சு. வெங்கடேசன் வேண்டுகோள்

மேலும்,”கோவிட் பெருந் தொற்றின் இரண்டாவது அலை முடியவில்லை. ஜுன் 28 அன்று கூட கர்நாடகா முழுவதும் 2576 புதிய தொற்றுகள், 93 மரணங்கள். இவற்றில் பெங்களுர் 20% எனில் எப்படி மன அமைதியோடும், உரிய கவனத்தோடு தேர்வர்கள் அலைந்து தேர்வு எழுத முடியும். டெல்டா பிளஸ் எச்சரிக்கைகள் வேறு விடுக்கப்படுகின்றன” என்று அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, “உயர்கல்வி விகிதத்திலும், எண்ணிக்கையிலும் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள ஒரு மாநிலத்தை ஒன்றிய அரசு இப்படித்தான் அணுகுமா? தொடர்ந்து ஒன்றிய அரசின் தேர்வுகளில் எல்லாம் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதும் நாம் குரல் எழுப்புவதும் தொடர் கதையாக உள்ளது”. என்றும் சு.வெங்கடேசன் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

‘ஒன்றிய அரசே, செவி மடு; தமிழகத்திற்கு மூச்சுக் காற்றை உடனே கொடு’ – மத்திய சுகாதார அமைச்சருக்கு சு. வெங்கடேசன் கடிதம்

எனவே, பிரதமரின் கட்டுப்பாட்டில் உள்ள அணுசக்தித்துறை தன்னுடைய அணுகுமுறையை மாற்ற வேண்டும். தமிழகத்திலும் ஒரு தேர்வு மையம் அறிவிக்கப்பட வேண்டுமெனக்கோரி அணுசக்தி துறை தலைவர் டாக்டர் தினேஷ் ஸ்ரீ வஸ்தவாவுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்