Aran Sei

‘ஒட்டுக்கேட்கத் துடிக்கும் ஒன்றிய அரசு நாங்கள் நேரடியாக பேசுகிறோமென்றால் மறுப்பதேன்?’ – சு.வெங்கடேசன் கேள்வி

ட்டுக்கேட்கத் துடிக்கும் ஒன்றிய அரசு, நாங்கள் நேரடியாக பேசுகிறோம் என்றால் மறுப்பது ஏன் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சு.வெங்கடேசன், “சுமார் 150 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 நாட்களாக போராடி வருகிறோம். ஒட்டுக்கேட்டது குறித்து ஒரு நிமிடம் கூட விவாதிக்க மறுக்கிறது ஒன்றிய அரசு.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், ஒட்டுக்கேட்கத் துடிக்கும் அரசு நாங்கள் நேரடியாக பேசுகிறோம் என்றால் மறுப்பது ஏன் என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

‘பெகசிஸ் விவகாரம் நாளுக்குநாள் பெரியதாகவும், அச்சுறுத்தலாகவும் வளர்கிறது’ – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது முதலே, பெகசிஸ் ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரி வருகின்றன.

இதுதொடர்பாக, நேற்று (ஜூலை 28), காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, சிபிஎம், சிபிஐ கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், பெகசிஸ் விவகாரத்திற்கு ஒன்றிய அரசு நாடாளுமன்ற சிறப்புக்குழு விசாரணைக்கு சம்மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இவ்விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்