Aran Sei

தமிழகத்தில் அதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை: அபாயக்கட்டத்தை நெருங்குவதாக சு.வெங்கடேசன் எச்சரிக்கை

மிழகத்தில் மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்றும் அதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்

இதுதொடர்பாக, இன்று (ஏப்ரல் 28), சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அபாயக்கட்டத்தை நெருங்குகிறோம். தமிழகத்தின் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி திறன் 400 மெட்ரிக் டன். ஏப்ரல் மாத மத்தியில் நமது மருத்துவ பயண்பாட்டிற்கான ஆக்சிஜன் தேவை 240 மெட்ரிக் டன்னாக இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக நமது பயன்பாடு 350 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக அரசு விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்