Aran Sei

புறக்கணிக்கப்படும் தமிழக ரயில் திட்டங்கள்: ‘தேவையோ கோடிகள்; கொடுப்பதோ ஆயிரங்கள்’ – சு.வெங்கடேசன் கண்டனம்

மிழக ரயில் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளன என்றும் 11 ஆயிரம் கோடி தேவையாக இருக்கும்போது, வெறும் 95 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (பிப்பிரவரி 4) மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து ரயில்வேயின் வளர்ச்சித் திட்டங்களுக்கான பிங்க் புக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தின் 11 புதிய லைன்திட்டங்களுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும்போது வெறும் 95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.

’இந்திய தேசிய ரயில் திட்டம்; 118 கி.மீ தூரத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் பாதை’ – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

208 கோடி தேவைப்படுகிற ராமேஸ்வரம் தனுஷ்கோடி திட்டத்துக்கு 75 கோடியும், மதுரை அருப்புக்கோட்டை வழியாகத் தூத்துக்குடிக்கான புதியபாதை திட்டத்தின் மதிப்பீடு 1800 கோடி, ஆனால் வெறும் 20 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று சு. வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “மற்ற திண்டிவனம்- செஞ்சி- திருவண்ணாமலை; திண்டிவனம் -நகரி; அத்திப்பட்டு – புத்தூர்; ஈரோடு -பழனி ;சென்னை- மகாபலிபுரம்- கடலூர்; கூடுவாஞ்சேரி- திருப்பெரும்புதூர்; மொரப்பூர்- தர்மபுரி; காரைக்கால் -பேரளம்; சின்னசேலம்- கள்ளக்குறிச்சி ; தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை ஆகிய திட்டங்களுக்குத் தேவைப்படுகிற பத்தாயிரம் கோடிக்கு ஒவ்வொரு திட்டத்துக்கும் தலா வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ” என்று அவர் விமர்சித்துள்ளார்.

’சமஸ்கிருதத்திற்கு ரூ.643.83 கோடி, தமிழுக்கு ரூ.22.94 கோடியா?’ – மத்திய அரசிற்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

“சென்ற ஆண்டு இதேபோலப் புதிய திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கியது. நான் அதனை வன்மையாகக் கண்டித்தேன். அது தொடர்பாக ரயில்வே வாரிய தலைவரையும் சந்தித்தேன்.ஆனாலும் இந்த ஆண்டும் வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கி இருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது” என்று சு. வெங்கடேசன் கூறியுள்ளார்.

“சென்ற ஆண்டு நான் இதை விமர்சித்தபோது ரயில்வே நிர்வாகம், தாங்கள் காட்பாடி- விழுப்புரம்; கரூர் -சேலம்- திண்டுக்கல்; கரூர்- ஈரோடு; சென்னை கடற்கரை-எழும்பூர் ஆகிய இரட்டை பாதை திட்டங்கள் மின் மையத்துடன் கூடியதாக இந்தப் பட்ஜெட்டில் இணைத்துள்ளோம் என்று கூறியிருந்தார்கள். ஆனால் அந்த நாலு திட்டத்துக்கும் கூடத் தலா வெறும் ஆயிரம் ரூபாய்தான் ஒதுக்கி இருப்பதை அப்போது சுட்டிக் காட்டினேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் செயல் மாநில உரிமைகளை நசுக்குகிறது – எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்

“ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இந்த ஆண்டும் இந்த நான்கு திட்டங்களுக்கு இதையே செய்திருக்கிறார்கள். காட்பாடி விழுப்புரம் திட்டத்துக்கு 1600 கோடி தேவை. ஒதுக்கி இருப்பது வெறும் ஆயிரம் ரூபாய். கரூர் சேலம் திண்டுக்கல் திட்டத்துக்கு 1,600 கோடி தேவை.ஒதுக்கி இருப்பது வெறும் ஆயிரம் ரூபாய். கரூர் ஈரோடு திட்டத்துக்குத் தேவை 650 கோடி. ஒதுக்கி இருப்பது வெறும் ஆயிரம் ரூபாய். பீச் திட்டத்துக்கு 4.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு 779 கோடி ரூபாய்க்கு 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்தத் திட்டங்கள் நடைமுறையில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்களாக மாறியுள்ளன.” என்று சு. வெங்கடேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், “தமிழக வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இதைப் போல மதுரை- வாஞ்சி மணியாச்சி- தூத்துக்குடி மின் மயத்துடன்  கூடிய இரட்டைப் பாதை திட்டம். அதைப் போல வாஞ்சி மணியாச்சி யிலிருந்து நாகர்கோயில்; அதைப்போலத் திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாகக் கன்னியாகுமரிக்கு என்று மூன்று திட்டங்களுக்கும் மீதி 3000 கோடி தேவைப்படுகிறது. ஆனால் சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வெறும் 775 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களவையில் அதிகரித்து வரும் பிராந்திய மொழிகளின் பயன்பாடு – இந்தி எதிர்ப்புதான் காரணமா?

இந்தத் திட்டம்  2017 ஆம் ஆண்டு அறிவித்தபோது 2022 ஆம் ஆண்டு முடியும் என்று  மத்திய அமைச்சரவை கூறியது என்றும் ஆனால் இப்போதைய நிலைமையில் 2025 ஆம் ஆண்டு கூட இந்தத் திட்டம் முடிவடையாத நிலை உள்ளது என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய பட்ஜெட் தமிழகத்தின் ரயில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்து புறக்கணித்து வருவது மிகவும் வன்மையான கண்டனத்துக்குரியது என்று கூறும் அவர், மத்திய அரசு மறுபரிசீலனை செய்து இந்தப் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இந்தத் திட்டங்களுக்கான போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்