Aran Sei

ஸ்மார்ட் சிட்டி ஆலோசனை குழு கூட்டம்: ரகசியமாய் நடத்தப்படுகிறதா? – சு.வெங்கடேசன் கேள்வி

துரை மாநகர ஸ்மார்ட் சிட்டி ஆலோசனை குழு கூட்டத்திற்கான அழைப்பை குழுவின் தலைவர், இணைத்தலைவர் ஆகியோருக்குத் தெரியாமல் மாநகராட்சியின் செய்திதொடர்பாளர் அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, இன்று (ஜனவரி 19) மதுரை ஸ்மார்ட்சிட்டி ஆலோசனைக்குழுவின் இணைத்தலைவரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “இன்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு ஸ்மார்ட் சிட்டி ஆலோசனை குழு கூட்டமும் அதனை தொடர்ந்து 11.00 மணிக்கு மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்களின் ஆய்வுக்கூட்டமும் நடைபெறுகிறது என்று மாநகராட்சியின் செய்தி தொடர்பாளர் ஊடகங்களுக்கு செய்தியைப் பகிர்ந்துள்ளார்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘மதுரை வீதியில் படகு ஓட்டலாம்; மாநகரின் நடுவில் ஒரு குளம்’ – ஸ்மார்ட் சிட்டி குறித்து பழனிவேல் ராஜன்

“இதன் பொருள் ஸ்மார்ட்சிட்டி ஆலோசனைக்குழுக் கூட்டம் ஒரு மணிநேரத்தில் முடிவடையும் என்பதாகும். இந்த அறிவிப்பு சம்பந்தமாக கூட்டத்தைக் கூட்டியுள்ள ஆலோசனைக் குழுவின் கன்வீனர் ( மாநகராட்சி ஆணையர்) அவர்களிடம் கேட்டேன். இப்படியொரு அறிவிப்பினை நான் செய்யச் சொல்லவில்லை என்கிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டேன். நாங்கள் இப்படி எதுவும் அறிவிக்கச் சொல்லவில்லை என்கின்றனர்” என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

மேலும், “அப்படியென்றால் ஒரு மணிநேரம் மட்டும் கூட்டம் நடைபெறும் என்று பொருள்படும் அறிவிப்பினை செய்யச் சொன்னது யார்? ஆலோசனைக்குழுவின் கன்வீனர் மற்றும் தலைவர், இணைத்தலைவர் ஆகியோருக்குத் தெரியாமல் மாநகராட்சியின் செய்திதொடர்பாளர் இப்படி ஒரு செய்தியை எப்படி வெளியிட்டார்?” என்று வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அரசுக்கு விருப்பமில்லையா? – உயர் நீதிமன்றம் கேள்வி

ஆலோசனைக்குழுவின் இணைத்தலைவர் என்ற முறையில் நான் தெரியப்படுத்திக்கொள்வது, ஸ்மார்ட்சிட்டியின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி மதுரை ஸ்மார்ட்சிட்டி திட்டங்கள் பற்றி முழுமையான ஆய்வு நடைபெறும் என்றும் அதற்கு நேரக்கட்டுப்பாடுகள் எதுவும் நாங்கள் வகுத்துக்கொள்ளவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்தெளிவுப்படுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்