Aran Sei

அஞ்சல் அலுவலகங்களில் பிரதமருக்கு நன்றி என போஸ்டர்: தடுப்பு மருந்துக்கு மாநிலங்களை அல்லாடவிட்டதற்கா என சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

ன்றி பிரதமர் அவர்களே என்று அஞ்சல் அலுவலகங்களில் போஸ்டர் ஒட்ட அறிவுறுத்தப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ஒன்றிய அரசு ஒன்று இருக்கும் போது ஒவ்வொரு நாடாக மாநில அரசுகளைத் தடுப்பூசி கிடைக்குமா என்று அலைய விட்டதற்கா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, சு.வெங்கடேசன் தனது முகநூல் பக்கத்தில், “நன்றி பிரதமர் அவர்களே!”. இப்படி ஒரு போஸ்டர் ஒட்ட வேண்டுமென்று அஞ்சல் அலுவலகங்களுக்கு அறிவுறுத்தல் வந்திருக்கிறது. எதற்காம்? எல்லோருக்கும் இலவசமாய் தடுப்பூசி தந்ததற்காகவாம். மூன்று விலைகள் வைத்து மாநிலங்களை அல்லாட விட்டதற்கா? ஒன்றிய அரசு ஒன்று இருக்கும் போது ஒவ்வொரு நாடாய் மாநில அரசுகளை தடுப்பூசி கிடைக்குமா என்று அலைய விட்டதற்கா? கடும் எதிர்ப்பு வந்தபிறகு தடுப்பூசி கொள்கையை திரும்பப் பெற்று அப்போதும் கூட 25% ஐ தனியாருக்கு ஒதுக்கிய கார்ப்பரேட் பாசத்திற்கா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நன்றி : facebook.com/SuVe4Madurai

ட்விட்டர் விவகாரம்: ‘140 கோடி இந்தியர்களின் குரலை நசுக்கும் பிரதமர் மோடி’ – காங்கிரஸ் கண்டனம்

“இந்தியாவில் உற்பத்தியான தடுப்பூசிகளை வெளி நாட்டிற்கு அனுப்பி விட்டு இங்கே இந்திய மக்களை தடுப்பூசி கிடைக்காமல் அலைமோத விட்டதற்கா?  தடுப்பூசி பற்றாக்குறை வந்தவுடன் எவ்வளவு தடுப்பூசி இருக்கிறது என்பதை கூட மக்களுக்குச் சொல்லக் கூடாது என மாநில அரசுகளுக்கு வாய்ப் பூட்டு போட்டதற்கா? உலகில் தடுப்பூசி போட்டவர்கள் விகிதத்தில் 10 வது இடத்துக்கும் கீழே இந்தியா இருப்பதற்கா?” என்று அவர் மேலும் கேள்விகளை பட்டியலிட்டுள்ளார்.

“இப்படி எத்தனையோ காரணங்களுக்காக மக்கள் மத்திய அரசை கடுமையாக வசையாடிக் கொண்டிருக்கும்போது அரசாங்க செலவில், அரசு அலுவலகத்தின் முன்னாள் அரசு அதிகாரியே போஸ்டர் ஒட்ட வேண்டுமாம். அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் ஒரு வாக்கியம் விடுபட்டுப் போயுள்ளது. “மூன்றாவது அலை வருவதற்குள் இந்த போஸ்டரை ஒட்ட வேண்டும்” என்ற வாக்கியத்தை அடுத்த சுற்றறிக்கையில் சேர்த்துக்கொள்ளவும்.” என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்