Aran Sei

சமையல் எரிவாயு விலையேற்றம்: ’மக்களின் அடுப்படிக்குள் புகுந்து அபகரிப்பது நியாயமற்றது’ – சு. வெங்கடேசன்

ந்திய ஒன்றியத்தின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறை அமைச்சர் ராமேஸ்வர் தெலி நாடாளுமன்றத்தில், தான் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில் சமையல் எரி வாயு மீது ஒன்றிய அரசு அளித்து வந்த மானியம் பெருமளவு குறைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (ஜூலை 27), சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில், 2016 ல் துவங்கி 2021 வரை எவ்வளவு பேர் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுங்கள் என்ற அரசின் வேண்டுகோளுக்கு செவி மடுத்துள்ளார்கள், சமையல் எரி வாயுக்காக எவ்வளவு மானியங்கள் ஒன்றிய அரசால் வழங்கப்பட்டுள்ளன. மானிய குறைப்ப்பு மற்றும் மன்யத்தை விட்டுக் கொடுத்ததால் அரசுக்கு மிச்சமான தொகை எவ்வளவு என்ற கேள்விகளை (எண்: 1010/ 26.07.2021)  தான் நாடாளுமன்றத்தில் எழுப்பி இருந்ததாக தெரிவித்துள்ளார்.

தேசத்துரோகச் சட்டம்: எளியதைக் கொன்று வலியது வெல்லும்

“அக்கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர், நாட்டில் மொத்தம் சமையல் எரிவாயு நுகர்வோர் 31.03.2021 அன்று 28.95 கோடி பேர் உள்ளனர் என்றும் அவர்களில் 1.08 கோடி பேர் மட்டுமே “மானியத்தை விட்டுக் கொடுங்கள்” என்ற வேண்டுகோளுக்கு செவி மடுத்துள்ளனர் என்றும், மொத்த மானியம் 2016- ரூ 22029 கோடிகள், 2017- ரூ 18337 கோடிகள், 2018 – ரூ 23464 கோடிகள், 2019- ரூ 37209 கோடிகள், 2020 – ரூ 24172 கோடிகள், 2021 – ரூ 11896 கோடிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், 2016 – 2021 காலத்திய நிதி ஆண்டுகளில் மானிய குறைப்பால், விட்டுக் கொடுத்ததால் அரசுக்கு மிச்சமான தொகை ரூ 57768 கோடிகள் என அமைச்சர் பதிலில் குறிப்பிட்டதாக அவ்வறிக்கையில் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளில் சமையல் எரிவாயு விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது – மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

ஒன்றிய அமைச்சரின் பதில் குறித்து கருத்து தெரிவித்துள்ள சு.வெங்கடேசன், “அமைச்சரின் பதில் சமையல் எரிவாயு விலை ஏற்றத்தின் காரணத்தை அம்பலமாக்குகிறது. நரேந்திர மோடி அவர்கள் 2014-ல் பதவி ஏற்ற போது ஒரு சிலிண்டர் விலை ரூ 410.50. இன்றோ ரூ 850 ஐ தொட்டு விட்டது. ஏழு ஆண்டுகளில் இரண்டு மடங்கு விலை உயர்வு. கடந்த 10 மாதங்களில் மட்டும் 41 சதவீத விலை உயர்வு. மக்கள் கோவிட் காரணமாக பெரும் பொருளாதார சுமைக்கு ஆளாகி இருக்கும் நிலையில் இவ்வளவு விலை உயர்வை சமையல் எரிவாயு விலையில் ஏற்படுத்தி இருப்பது குரூரமானது.” என்று விமர்சித்துள்ளார்.

பெகசிஸ் ஸ்பைவேர்: ‘உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை வேண்டும்’ – மூத்தப் பத்திரிகையாளர் என்.ராம் பொதுநல மனு

மேலும், “அமைச்சரின் பதிலைப் பார்த்தால் தேர்தல் ஆண்டு வந்தவுடன் மானியத்தைச் சற்று கூட்டி தேர்தல் முடிந்தவுடன் பெரும் விலை உயர்வைச் செய்திருப்பதும் வெளிப்படையாக தெரிகிறது. அமெரிக்கா கூட கார்ப்பரேட் வரிகளை உயர்த்தும் போது கூட இங்கு கார்ப்பரேட் வரிகளை உயர்த்தாமல் சாதாரண மக்களின் அடுப்படிக்குள் புகுந்து அபகரிப்பது நியாயமற்றது.” என்று சு. வெங்கடேசன் தனது அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்