Aran Sei

‘கீழடி நாணயங்களின் ஆய்வு முடிவை ஒன்றிய அரசு வெளியிடவில்லை’ – சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

கீழடி நாணயங்களின் ஆய்வு முடிவை ஒன்றிய அரசு வெளியிடவில்லை என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (செப்டம்பர் 10), தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சு.வெங்கடேசன், “கீழடியில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் நடத்திய அகழாய்வில் 11 முத்திரை நாணயங்கள் கிடைத்தன. அதன் ஆய்வு முடிவை இன்று வரை ஒன்றிய அரசு வெளியிடவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “கடந்த ஆண்டு ஆய்வில் ஒரு முத்திரை நாணயம் கிடைத்தது. அதன் ஆய்வு முடிவை தமிழக அரசு கம்பீரத்தோடு அறிவித்திருக்கிறது. இதுவும் இருவேறு நாகரிகத்தின் வெளிப்பாடுதான்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய பதிவுகள்:

3200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தாமிரபரணி நாகரிகம்: ‘சிவகளை அகழாய்வு பொருட்களுடன் அருங்காட்சியகம்’ – முதலமைச்சர் அறிவிப்பு

காவி திருவள்ளூவர் : தவறுதலாக ஒளிபரப்ப பட்டுவிட்டது – அமைச்சர் செங்கோட்டையன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்