கொரோனா போராளிகள் காப்பீடு: கை தட்டிய அரசே கை விரிக்கலாமா? – சு.வெங்கடேசன் கேள்வி

கோவிட் பேரிடரை எதிர் கொள்ளும் பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உயிரிழந்த முன் வரிசைப் பணியாளர்களுக்கு வழங்கி வந்த ரூ 50 லட்சம் காப்பீடு திட்டம் காலாவதியாகி 27 நாட்கள் ஆகி விட்டன என்கிற அதிர்ச்சியான செய்தியை எப்படி ஏற்றுக் கொள்வது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.