Aran Sei

‘தமிழ் நாட்டில் மட்டும் இந்தி திணிப்பு தொடர்ச்சியாக அரங்கேறுகிறது’ – ஒன்றிய அரசு மீது சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

மிழ் நாட்டில் மட்டும் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் இந்தி திணிப்பு தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது என்றும் விழிப்புடன் இருந்து நமக்கான உரிமைகள் வென்றெடுப்போம் என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெஙக்டேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று(அக்டோபர் 10), சு.வெஙக்டேசன் தனது டிவிட்டர் பக்கத்தில், “பல்வேறு உயர் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு இணங்க வரைவு சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2020ஐ ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் தமிழ் உட்பட 22 மொழிகளில் வெளியிட்டுள்ளது. ஆனால், தமிழ் இணைப்பில் இந்தி மொழி ஆவணமே இருக்கிறது.” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், இந்தத் தவறை உடனடியாக சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் சரி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.

அதைத் தொடர்ந்து, இன்று(அக்டோபர் 11) தமிழில் ஆவணம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சு.வெங்கடேசன் தனது டிவிட்டர் பக்கத்தில், “தமிழில் வெளியானது வரைவு சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2021. தமிழுக்கான இணைப்பில் இந்தி மொழி ஆவணம் வெளியானது குறித்து சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். தற்போது, அமைச்சகத்தின்  அலுவலகத்திலிருந்து அழைத்து தமிழில் ஆவணம் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்கள்.” என்று கூறியுள்ளார்.

மேலும், “தமிழ் நாட்டில் மட்டும் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் இந்தி திணிப்பு தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. விழிப்புடன் இருந்து நமக்கான உரிமைகள் வென்றெடுப்போம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்