நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்ட மக்களுக்கான நிதியைத்தர சுமார் 2 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் இந்திய ஒன்றிய அரசு, புதிய நாடாளுமன்றத்திற்கான வேலைகளை அடுத்த நாளே ஆரம்பிக்கிறது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒன்றிய அரசை குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு, 2020-21 மற்றும் 2021- 22 நிதி ஆண்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மேலும், நிறுத்தி வைக்கப்பட்ட நிதியை, சுகாதார சேவைகளுக்கும், நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் பணிகளுக்கும் பயன்படுத்தப்படும் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது.
புதிய நாடாளுமன்றமும், ஆளும் வர்க்கத்தின் அரசியல் கர்வமும் – நீரா சந்தோக்
இந்நிலையில், 2019-20 ஆம் ஆண்டுக்கான நாடாளுமனற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் இரண்டாம் தவனைக்கு அனுமதியளித்து, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம் சு.வெங்கடேசனுக்கு கடிதம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக, இன்று (ஜூன் 3), தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், ஒரு வழியாக 2019-20 ஆம் ஆண்டுக்கான எம் பி தொகுதி மேம்பாட்டு நிதியின் இரண்டாம் தவனைக்கு அனுமதி கொடுத்துள்ளது ஒன்றிய அரசு என்று தெரிவித்துள்ளார்.
ஒரு வழியாக 2019-20 ஆம் ஆண்டுக்கான எம் பி தொகுதி மேம்பாட்டு நிதியின் இரண்டாம் தவனைக்கு அனுமதி கொடுத்துள்ளது ஒன்றிய அரசு.
நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்ட மக்களுக்கான நிதியைத்தர சுமார் 2 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் ஒன்றிய அரசு, சென்ரல் விஸ்தாவுக்கான வேலைகளை அடுத்த நாளே ஆரம்பிக்கிறது. pic.twitter.com/5yl7gPprwZ
— Su Venkatesan MP (@SuVe4Madurai) June 3, 2021
மேலும், நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்ட மக்களுக்கான நிதியைத்தர சுமார் 2 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் ஒன்றிய அரசு, சென்ரல் விஸ்தாவுக்கான வேலைகளை அடுத்த நாளே ஆரம்பிக்கிறது என்று சு.வெங்கடேசன் ஒன்றிய அரசை குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் – திட்ட செலவு 13,450 கோடியாக உயர்வு
அண்மையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி வைத்துவிட்டு, மத்திய அரசு புதிய நாடாளுமன்றம் கட்டுகிறது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே குற்றம் சாட்டியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.