Aran Sei

‘திராவிட மொழிகளில் உள்ள கல்வெட்டுகளின் ஆய்வுகள் புறக்கணிக்கப்படுகிறதா?’ – ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் கேள்வி

ழுபது சதவிகிதத்துக்கும் மேல் கல்வெட்டுகள் திராவிட மொழிகளில் இருப்பதால், அதன் ஆய்வுகள் புறக்கணிக்கப்படுகிறதா என்ற ஐயம் எழுகிறது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய தொல்லியல் துறை புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் கல்வெட்டு ஆய்வுக்கான புதிய பணியிடங்கள் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.

“70 சதவிகிதத்துக்கும் மேல் கல்வெட்டுகள் திராவிட மொழிகளில் இருப்பதால் புறக்கணிக்கப்படுகிறதா என்ற ஐயம் எழுகிறது. எனவே இந்திய தொல்லியல் துறை இம்முடிவினை மறுபரிசீலனை செய்க.” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அந்த ட்வீட்டுன் இந்திய தொல்லியல் துறை வெயிட்டுள்ள 27 வகையான பணியிடங்களுக்கான, 758 பணியிடங்கள் உள்ளதாக பட்டியலிடும் அத்துறையின் அறிக்கையை இணைத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்