2030ஆம் ஆண்டுக்குள் கேரளா மாநிலத்தில் தோராயமாக 60 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசிப்பர் என்று அம்மாநில திட்டமிடல் வாரியத்தின் அண்மைய ஆய்வு கூறியுள்ளது.
அச்சமயத்தில், மாநிலத்தின் பூர்வீக மக்கள் தொகை 3.6 கோடியாக இருக்கும் என்றும் மாநிலத்தில் உள்ள மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கிற்கு சமமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மக்கள் இருக்கும் என்றும் அவ்வாய்வில் கணிக்கப்பட்டுள்ளது.
‘கேரளாவில் புலம்பெயர், முறைசாரா வேலைவாய்ப்பு மற்றும் நகரமயமாக்கல்’ என்ற தலைப்பில், கேரள மாநில திட்டமிடல் வாரியத்தால் நிதியுதவி செய்யப்பட்டு வெளியிடப்பட்ட ஆய்வில், 2017-18ஆம் ஆண்டில், கேரளாவில் இருந்த புலம்பெயர்ந்திருந்த தொழிலாளர்களின் மக்கள் தொகை 31.4 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய புலம்பெயர் விகிதத்தின்படி, 2025ஆம் ஆண்டில் 45.7 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடங்கி 47.9 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வரையிலும், 2030ஆம் ஆண்டு வாக்கில் 55.9 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடங்கி 59.7 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வரையிலும் அவர்களின் மக்கள்தொகை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் மாநிலம் முழுவதும் உள்ள கிராமங்களில் உள்ள இளைஞர்களை விட புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவை எல்லாம் வரதட்சணை மரணங்கள்? – புதிய விளக்கமளித்த உச்ச நீதிமன்றம்
அசாம் மாநிலத்தில் அடிக்கடி நடக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கும் மாநில பூர்வக்குடி மக்களுக்கும் இடையேயான மோதல்கள் கேரள மாநிலத்திலும் இனி நடக்க தொடங்குமோ என்ற அச்சத்தையை, எர்ணாகுளத்தில் அண்மையில் நடந்த வன்முறை கிளப்பியுள்ளது.
எர்ணாகுளம் மாவட்டம் கிழக்கம்பலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது புலம்பெயர் தொழிலாளர்களிடையே நடந்த மோதலை கட்டுப்படுத்த முயன்ற காவல்துறையினரை தாக்கியதோடு, அவர்களின் வாகனங்களையும் சேதப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டி, 24 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலம்பெயர் தொழிலாளர்களை உள்ளூர் மக்களுடன் ஒருங்கிணைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இதன் வழியாக அவர்களுக்கிடையே மோதல் உருவாகும் சூழலை குறைக்க முடியும் என்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.