Aran Sei

ஈரோடு: தொடக்கப்பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள் – வலுக்கும் கண்டனம்

பெருந்துறை அருகே உள்ள முள்ளம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்வதாக வெளியான காணொளியால் சர்ச்சை கிளம்பியுள்ளது .

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள முள்ளம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில், 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியை மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர் என இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஹிஜாப் உள்ளிட்ட விவகாரங்களில் பெண்கள் குறிவைக்கப்படுவதை நிறுத்துங்கள் – பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் சந்து

இந்த பள்ளியின் கழிவறையை ஒரு மாணவனும், குழந்தை ஒன்றும் இணைந்து சுத்தம் செய்த காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பதிவான காணொளியில்,  “இளைஞர் ஒருவர் மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்வதை பார்த்து அதனை வீடியோவாக பதிவு செய்கிறார். மாணவர்களிடம் நீங்கள் ஏன் கழிவறை சுத்தம் செய்கிறீர்கள் என கேட்ட போது, பள்ளிக்கு யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் தான் கழிவறை சுத்தம் செய்ய வேண்டும் என ஆசிரியர் கூறியுள்ளதாக மாணவர் தெரிவிக்கிறார். அதனை தொடர்ந்து, பேசிய மாணவி ஒருவர் பள்ளி வளாகத்தை நாங்களே சுத்தம் செய்துக்கொள்வோம், கழிவறையும் அப்படித்தான் யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் சுத்தம் செய்வோம்” என கூறுகின்றனர்.

ஆப்கானிஸ்தான்: பிபிசி, வாய்ஸ் ஆப் அமெரிக்கா செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்த தாலிபான் அரசு

பள்ளி மாணவர்களை வளாக சுத்தம் செய்வதற்கும், சொந்த வேலைக்கும் ஆசிரியர்கள் பயன்படுத்தக் கூடாது என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவத்திற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்