Aran Sei

இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரி வர எதிர்ப்பு: காவி துண்டுடன் கல்லூரிக்கு வந்த மாணவர்கள்

ர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் படிக்கும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என்ற கல்லூரியின் உத்தரவை எதிர்த்தது உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், இதற்குத் தெரிவித்து குந்தாப்பூரில் உள்ள அரசுப் பல்கலைக் கழகக் கல்லூரியில் படிக்கும் 100 மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்துள்ளனர்.

ஹிஜாப் அணியும் சட்டஉரிமை கோரும் மாணவிகள் – பாகிஸ்தானுக்கு போக சொல்லும் ஸ்ரீராம் சேனா தலைவர்

இஸ்லாமிய மதத்தைக் கடைப்பிடித்து வரும் மாணவிகள் ஹிஜாப் அணிந்திருந்ததால் கல்வி கற்கும் அவர்களின் அடிப்படை உரிமை மறுக்கப்படுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானவை என்று மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கர்நாடகாவில் ஹிஜாப் அணிய அனுமதி மறுத்த கல்லூரி நிர்வாகம் – மாணவிகள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

சில இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்ததை எதிர்க்கும் விதமாக மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்திருந்ததைத் தொடர்ந்து, குந்தாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான ஹலடி சீனிவாச ஷெட்டி மாணவர்களின் பெற்றோருடன் ஒரு ஆலோசனைக் கூட்டத்தைக் கடத்தினார். அதில் அனைத்து மாணவர்களும் சீருடை மட்டும் தான் அணிந்து வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

‘உடுப்பி அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை’ – இஸ்லாமிய மாணவிகள் உரிமைக்குரல்

ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர வேண்டாம் என்று மாணவர்களின் பெற்றோரிடம் கேட்டுக் கொண்டதாகவும், வகுப்பறையில் ஹிஜாப், காவி துண்டுகள் என எதுவும் இருக்கக்கூடாது, மாணவர்கள் தங்களது சீருடையை மட்டும் தான் அணிய வேண்டுமெனவும் அவர்களின் கூறியுள்ளேன் என்று ஹலடி சீனிவாச ஷெட்டி தெரிவித்துள்ளார்.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்