“கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த மாணவர்கள் 10 மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுத அனுமதிக்கப் பட மாட்டார்கள். மாணவர்கள் தங்களது தவறை உணர்ந்து ஹிஜாப் அணியாமல் வந்தால், இரண்டு மாதங்களுக்குப் பிறகு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நாகேஷ் என்டிடிவியிடம் தெரிவித்துள்ளார்.
ஹிஜாப் தடையால் தேர்வு எழுதாத மாணவர்கள் – மறுதேர்வு நடத்த முடியாது என்று கர்நாடக அரசு அறிவிப்பு
“ஹிஜாப் அணிந்து வரும் மாணவர்களுக்கு எந்தவிதமான விதிவிலக்குகளும், சலுகைகளும் வழங்கப்படாது. ஹிஜாப் தடையை உறுதி செய்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அனைவரும் பின்பற்றித் தேர்வெழுத வேண்டும்” என்று அமைச்சர் நாகேஷ் கூறியுள்ளார்.
வகுப்பறைக்குள் மத ரீதியிலான உடைகளை அணிந்து வரக் கூடாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையின்போது தேர்வுகளைத் தவறவிட்ட இஸ்லாமிய மாணவிகளுக்கு மறுதேர்வு நடத்த முடியாது என்று கர்நாடக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது..
வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய மாணவர்களுக்கு அனுமதி மறுத்த கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களை ஹோலி விடுமுறைக்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
நடக்கவிருக்கும் தேர்வுகளை மனதில் வைத்து அவசர விசாரணையாக இம்மனுக்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே கோரிக்கை வைத்தார்.
“விடுமுறைக்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டியலிடுகிறோம். எங்களுக்கு நேரம் கொடுங்கள்” என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
Source : NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.