Aran Sei

உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் – எதிர்காலம் குறித்து மாணவர்கள் கவலை

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள், எப்போது தங்கள் படிப்பை மீண்டும் தொடர முடியும் என்று தெரியாமல், தங்களது எதிர்காலம் குறித்து கவலையில் உள்ளனர்.

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மருத்துவ மாணவர்களின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தும் வகையில் அண்மையில் உருவாக்கப்பட்ட ‘அனைத்து கேரள உக்ரைன் மருத்துவ மாணவர்கள் மற்றும் பெற்றோர் சங்கமானது’, நேற்று (மார்ச் 19), எர்ணாகுளம் மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளது.

அப்போது, தங்களின் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த தங்கள் கவலையை பெற்றோர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மெட்ரோ ரயில்களை திறப்பதை விட உக்ரைனில் தவிக்கும் மாணவர்கள் மீட்கலாம் – பிரதமர் மோடிக்கு சரத் பவார் அறிவுரை

“நாடு திரும்பியவர்களில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தொடங்கி இறுதியாண்டு மாணவர்கள் வரை உள்ளனர். கடைசி செமஸ்டர் படித்துக் கொண்டிருந்தவர்கள் ப்ராக்டிக்கல் தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். அதை முடிக்காமல் அவர்களால் படிப்பை முடித்ததற்கான சான்றிதழைப் பெற முடியாது” என்று ஒடேசா தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஐந்தாம் ஆண்டு மருத்துவ மாணவர் ஷியாம்குமாரின் பெற்றோர் சில்வி சுனில் கூறியுள்ளார்.

உக்ரைனில் உள்ள பல்கலைக்கழகங்கள் தற்போது ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

“மார்ச்-ஏப்ரல் மாதங்கள் எங்களுக்கு தேர்வுகள் நடக்கும் காலம். எங்களுடைய எழுத்து தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்று கூறப்பட்டது. அதேநேரம், ப்ராக்டிக்கல் தேர்வுகளும் (மருத்துவமனைகளில் நடத்தப்படுவது) எழுத்து தேர்வுகளைப் போல முக்கியமானது. அது எப்படி நடக்கப் போகிறது என எங்களுக்குத் தெரியவில்லை” என்று கிவ்வில் உள்ள போகோலோமெட்ஸ் தேசிய பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவி அனிகா மெரின் தாமஸ் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள் குறித்த ஒன்றிய அமைச்சரின் கருத்து: மன்னிப்பு கேட்க எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

மேலும், “எங்களை இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்குமாறு அரசிடம் கேட்டுக்கொள்கிறோம். இதனால், நாங்கள் எங்கள் படிப்பில் ஓர் ஆண்டை இழக்காமல், எங்கள் படிப்பைத் தொடர முடியும்” என்று மாணவி அனிதா மெரீன் தாமஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்