Aran Sei

கர்நாடகாவில் ஹிஜாப் அணிய அனுமதி மறுத்த கல்லூரி நிர்வாகம் – மாணவிகள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் 2021 டிசம்பர் 31 முதல் ஹிஜாப் அணிந்து வந்த 6 மாணவிகளை வகுப்பறைக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இதனையொட்டி இந்த மாணவிகள் தங்களை ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குள் வர அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கல்லூரி நிர்வாகம் நிராகரித்ததை எதிர்த்தது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

மாணவி ரேஷாம் பாரூக் சார்பில் அவரது சகோதரர் முபாரக் பாரூக் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். மாணவிகள் ஹிஜாப் அணியும் உரிமை என்பது அரசியலமைப்பின் 14 மற்றும் 25 வது பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய வெறுப்பை சமூக ஊடகங்கள் வழியே பரப்பும் இந்துத்துவ அமைப்புகள் – ஆய்வில் தகவல்

கல்லூரி நிர்வாகத்தின் எந்த குறுக்கீடும் இல்லாமல், ஹிஜாப் அணிந்து கொண்டு வகுப்புகளில் கலந்துகொள்ளத் தன்னையும் சக மாணவர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அந்த மனுவில் இஸ்லாமிய மதத்தைக் கடைப்பிடித்து வரும் 8 மாணவிகள் ஹிஜாப் அணிந்திருந்ததால் கல்வி கற்கும் அவர்களின் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகத்தின் இத்தகைய நடவடிக்கைகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானவை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஹிஜாப் அணியும் உரிமை கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளைச் கல்லூரி வளர்ச்சிக் குழுவின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ரகுபதி பட் சந்தித்துப் பேசினார். அதில் கல்வித்துறையின் முடிவின்படி ஹிஜாப் அணிந்த மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

Source : PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்