Aran Sei

நிலக்கரியால் ஏற்படும் மாசு – போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

ன்னும் ஆறு வாரங்களுக்குள் பள்ளி ஆண்டு தேர்வு நடைபெறவுள்ள நிலையில், ஒடிசாவை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் மாதுரி பைசல், நிலக்கரி நிறுவனத்தால் ஏற்படும் மாசுப்பாட்டில் இருந்து தன் கிராமத்தை காக்க போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தின் ரத்தன்பூர் கிராமத்தில்  மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (எம்.சி.எல்) என்னும் நிலக்கரி நிறுவனம் உள்ளது. அந்நிறுவனத்தால்,  ரத்தன்பூர் கிராமம் மாசுபடுவதாக குற்றஞ்சாட்டி, அக்கிராமத்தை சேர்ந்த மாணவர் மாதுரி பைசல் அமைதி வழியில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

மாணவர் மாதுரி பைசல் மட்டுமின்றி, அவரது வகுப்பு தோழர்களான அஞ்சனா பிரதான், சஸ்மிதா நாக், லிசா போய், செபதி பசாயத், சுனிதா நாயக் ஆகியோர் ஒன்றிணைந்து, தங்கள் கிராமத்தில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டிற்கு எதிராக களமிறங்கியுள்ளனர்.

நீலகிரி பழங்குடிகளிடையே அதிகரித்து வரும் தற்கொலைகள் – இடப்பெயர்வு காரணமா?

“எங்கள் அன்றாட வாழ்க்கையை பாதித்து வரும் நிலக்கரி தூசியால் ஏற்படும் இந்த காற்று மாசுப்பாட்டை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. மாசில்லாத கிராமத்தை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் கோருவது அநியாயமா? எங்கள் கிராமத்தின் வழியாக நிலக்கரியை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால், பல ஆண்டுகளாகவே நாங்கள் பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம்.” என்று மாதுரி பைசல் கூறியுள்ளார்.

மாதுரியின் ஆதங்கத்தையே பிரதிபலித்த அவரது தோழியான அஞ்சனா, “நிலக்கரி வாகன போக்குவரத்தால் எங்கள் வகுப்பறைகளும் வீடுகளும், எந்நேரமும் சத்தமும் தூசியுமாக நிறைந்திருக்கும். இந்த மாசுபாட்டால் எங்கள் வாழ்க்கை முழுவதுமாக மோசமாக ஆக்கியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்