கர்நாடகாவின் கல்வி நிறுவனங்களில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் அரசின் செயலானது இஸ்லாமியர்கள் பொதுச் சமூகத்திலிருந்து ஓரங்கட்டுவதை சட்டப்பூர்வமாக்கும் முயற்சி என்று முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
இந்தியா பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு. “ஆனால் இங்கு ஒரே மொழி, ஒரே உடை என்று திணிக்க முயற்சி நடக்கிறது, அது நடக்காது என்று மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரி வர எதிர்ப்பு: காவி துண்டுடன் கல்லூரிக்கு வந்த மாணவர்கள்
இஸ்லாமியப் பெண்கள் தங்களது உடையின் காரணமாகக் கல்வி உரிமை மறுக்கப்படுவதையும், ஓரங்கட்டப்படுவதையும் சட்டப்பூர்வமாக்குவது காந்தியின் இந்தியாவை கோட்சேவின் இந்தியாவாக மாற்றுவதாகும் என்று முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.