கேரளாவில் பழங்குடி சமூக மாணவியை இழிவாக நடத்திய பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் நேனோ அறிவியல் துறையில் மேற்படிப்பை முடித்த பழங்குடி வகுப்பைச்சேர்ந்த தீபா பி மோகனன் என்கிற மாணவி கடந்த2011-ம் ஆண்டு அதே துறையில் முனைவர் (பி.எச்டி) படிப்பில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், சாதிய பாகுபாடு காட்டப்படுவதாக பேராசிரியர் நந்தகுமார் கலரைக்கல் மீது குற்றஞ்சுமத்தினார். கடந்த சில வாரங்களாக பல்கலைக்கழகத்தின் வாசலில் அந்த மாணவி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
நேனோ அறிவியல் துறைத் தலைவரான பேராசிரியர் கே. நந்தகுமார் கலரைக்கல், தன்னை ஜாதி பெயரை சொல்லி இழிவாக பேசியதாகவும், முனைவர் படிப்பை முடிக்க விடாமல் தன்னை தடுப்பதாகவும் தீபா பி மோகன்ன் குற்றம்சாட்டினார். மாணவியின் இந்தப் போராட்டத்துக்குக் கேரளாவில் உள்ள தலித் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.
கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் பிந்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரச் சொல்லி கோரியிருந்தார். பேராசிரியர் மீது குற்றம் இருந்தால் அவரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
‘அதிகாரப் பேச்சை தவிர்க்காவிட்டால் பாஜக தலைவர்களின் நாக்கை அறுப்போம்’ – தெலுங்கானா முதலமைச்சர்
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள அரசு, மாணவியின் புகார் குறித்துஉரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியது. இதையடுத்து, பேராசிரியர் நந்தகுமாரை பணிநீக்கம் செய்து மகாத்மா காந்தி பல்கலைக்கழக துணைவேந்தர் சபு தாமஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும், அந்த பழங்குடி சமூக மாணவி தமது முனைவர் படிப்பை முடிக்க உதவி வழங்கப்படும் எனவும் துணைவேந்தர் உறுதி அளித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மாணவி தீபாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
Source: newindianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.