Aran Sei

நாகை: கல்லூரி கட்டணம் கட்டாததால் வகுப்பிற்கு வெளியே நிறுத்தப்பட்ட மாணவி – மன உளைச்சலால் தற்கொலை

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷினி என்ற மாணவி கல்லூரி கட்டணம் கட்ட முடியாததால் ஒரு வாரமாக வகுப்பிற்கு வெளியே நிற்கவைக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

திருவள்ளூர் சாமியார் ஆசிரமத்தில் கல்லூரி மாணவி தற்கொலை – காவல்துறை விசாரணை

கல்லூரியின் தாளாளர் ஆனந்த் , முதல்வர் லட்சுமிகாந்தன், வகுப்பாசிரியர் ஜென்சி ஆகியோர் மீது நாகூர் காவல்துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கூலி தொழிலாளியின் மகளான சுபாஷினி சர்ஐசக் நியூட்டன் கல்லூரியில் பிசியோதெரபி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இரண்டாம் ஆண்டிற்கான பருவ கட்டணம் கட்டமுடியாமல் தொடர்ந்து ஒரு வாரமாக வகுப்புக்கு வெளியே சுபாஷினி நிற்கவைக்க பட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை

இந்நிலையில், கல்லூரி தாளாளர், முதல்வர், வகுப்பாசிரியர் உள்ளிட்டோரைக் கைது செய்யக் கோரி மாணவர்கள் பாப்பாகோவில் நாகை கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். பிறகு காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையினால் இந்த சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Source : daily thanthi 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்