Aran Sei

குஜராத்திலும் மத மாற்றத் தடைச் சட்டம் – அடுத்த மாதம் கொண்டுவரப்படும் என அறிவிப்பு

குஜராத்தில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரப்படும் என்று, அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் பஞ்சமஹால் மாவட்டத்தின் கோத்ரா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட ரூபானி, வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்தச் சட்டத்தை அரசு கொண்டு வரும் எனக் கூறியுள்ளார்.

பிப்ரவரி 28 ஆம் தேதி, குஜராத் மாநிலத்தில் உள்ள நகராட்சிகள், தாலுகா மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகளுக்கான தேர்தல்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட ரூபானி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு புதிய விதிமுறைகள் – மத்திய அரசு அறிவிப்பு

மத்திய பிரதேச மற்றும் உத்திர பிரதேச மாநில அரசுகள், “லவ் ஜிஹாத்” அல்லது இந்து பெண்களைத் திருமணத்தின் மூலம் மதம் மாற்றுவதற்கான சதி என்று கூறப்படுவதைத் தடுக்க சட்டங்களை இயற்றியுள்ளன.

”இந்து சிறுமிகளைக் கடத்திச் செல்லும் இந்தச் செயலை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். பெண்கள் ஏமாற்றப்பட்டு மதம் மாற்றப்படுகிறார்கள். இந்தப் புதிய சட்டம் இது போன்ற நடவடிக்கைகளை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றும், இந்தச் சட்டத்தை மார்ச் 1 ஆம் தேதி தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு  கொண்டு வர இருக்கிறது என விஜய் ரூபானி தெரிவித்தார்.

முன்னதாக, மத்திய பிரதேசம் மற்றும் உத்திர பிரதேசத்தில் இருப்பது போன்ற சட்டத்தை குஜராத்திலும் இயற்ற வேண்டும் என, பாஜக சட்டமன்ற உறுப்பினர் கைலாஷ் மேத்தா மற்றும் வதோதரா எம்.பி ரஞ்சன்பென் பட் கோரிக்கை வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Source : PTI

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்