Aran Sei

தனியார்மயமாக்கலுக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம் – நாடுதழுவிய போராட்டமாக மாற்ற திட்டம்.

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உருக்காலை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் 8 அன்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் , ஆந்திர மாநில பொதுத்துறை நிறுவனமான ராஷ்ட்ரிய இஸ்பத் நிகம் லிமிடெட்டில் (RICL) இருந்து 100% அரசின் முதலீடுகளைத் திரும்பப் பெறவிருப்பதாக அறிவித்திருந்தார்.

“சோசியலிசம் என்பது சுமை; பொதுத்துறை நிறுவனங்களை விற்பதே எங்கள் நோக்கம்” – நிர்மலா சீதாராமன்

இந்நிலையில் நிதி அமைச்சரின் இந்த அறிவிப்பு விசாகப்பட்டின இரும்பு உருக்காலை தொழிலாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தி வயர் செய்தி கூறுகிறது.

மத்திய அரசின் இந்த முடிவினால் தற்போது விசாகப்பட்டினம் இரும்பு உருக்காலை தனியாருக்கு விற்கப்படவிருப்பதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் நிதி உதவித் திட்டத்திற்கு நிதி குறைப்பு? – நிர்மலா சீதாராமனின் விளக்கம் சரியா?

இந்நிலையில் அரசின் தனியார்மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிர்த்து விசாகப்பட்டினம் இரும்பு உருக்காலை தொழிலாளர்களின் 36 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை நடத்தி வருவதாக தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம்குறித்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் நரசிங் ராவ் , ” இந்தியா முழுவதும் உள்ள 20 தொழிலாளர் சங்கங்களை ஒருங்கிணைத்துப் போராட்டம் நடத்தவிருப்பதாகவும் கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘மீண்டும் தனியார்மயமாக்கல்’ – நிதி ஆயோக் ஆலோசனை

மேலும், தனியார்மயமாக்கலுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டமாக விவசாயிகளின் போராட்டம் நடப்பது போல நடத்தவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம் குறித்து பேசிய அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, “அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் ” என்று கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கின்றது.

ஆந்திர தொழிலாளர்களின் இந்தப் போராட்டம் 29 நாட்களை இன்றோடு எட்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்