Aran Sei

பொதுத் துறை நிறுவனங்களை விற்க மத்திய அரசுக்கு உரிமை கிடையாது – தனியார்மயமாக்கலுக்கு எதிராகத் தொழிலாளர்கள் போராட்டம்

விசாகப்பட்டினம் இரும்பு உருக்காலையை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள தொழிற்சங்கத்தலைவர்கள், “இந்த கொரனோ காலத்திலும் விசாகப்பட்டினம் இரும்பு உருக்காலை 18,000 கோடி ரூபாய் ஈட்டியிருக்கிறது. மேலும், வங்கியில் பெறப்பட்ட கடன்களும் அடைக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

தனியார்மயமாக்கலுக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம் – நாடுதழுவிய போராட்டமாக மாற்ற திட்டம்.

மேலும், விசாகப்பட்டினம் உருக்காலையை விற்கலாம் என மத்திய அரசு கனவு கண்டு வருவதாகவும், பொதுத்துறை நிறுவனங்களை விற்க மத்திய அரசுக்கு உரிமை கிடையாது என்று தெரிவித்துள்ளதாகவும் தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் தனியார்மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் – வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 4 அன்று தொழிலாளர்களை ஒன்றிணைத்து பேரணி, உண்ணாநிலை ஆகிய போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக தொழிலாளர்கள் கூறியுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

மேலும், விசாகப்பட்டினம் உருக்காலை – ஆந்திராவின் உரிமை (Visakha Ukku – Andhrula Hakku) என்ற முழக்கத்தையும் தொழிலாளர்கள் எழுப்பியுள்ளதாக தி இந்து செய்தி கூறுகிறது.

உருக்காலையைத் தனியாருக்கு தாரைவார்ப்பதை எதித்து இந்திய மாணவர் சங்கம் பெரும் பேரணியை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.#Andra

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்