போலியான செய்தி பரப்ப மற்றும் கலவரத்தை ஏற்படுத்தச் சமூக வலைதளங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களைத் தவறாகப் பயன்படுத்துவது தொடர்பாக, ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்சப், லிங்க்ட்இன் ஆகிய சமூக வலைதளங்களின் பெயர்களை குறிப்பிட்டு, அமைச்சர் இந்த கருத்தை கூறியுள்ளார்.
மாநிலங்களவை கேள்வி நேரத்தின்போது பேசிய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் “உங்களுக்கு லட்சக்கணக்கான பயனாளர்கள் இருக்கிறார்கள், நீங்கள் வியாபாரம் செய்யவும், பணம் சம்பாதிக்கவும் முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு நீங்கள் இந்திய அரசிலமைப்பு சட்டத்தை மதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
பீமா கோரேகான் வழக்கில் புதிய திருப்பம் – கம்ப்யூட்டரை ‘ஹேக்’ செய்து தகவல்களை மாற்றியது அம்பலம்
”நாங்கள் சமூக வலைதளங்களை மதிக்கிறோம், அவை சாமானிய மக்களுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் சமூக வலைதளங்களின் பங்கு மிகப்பெரியது. இருப்பினும், போலியான செய்தியைப் பரப்ப மற்றும் கலவரம் ஏற்படுத்த, சமூக வலைதளங்களைத் தவறாகப் பயன்படுத்தினால், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என அமைச்சர் கூறியுள்ளார்.
பேச்சு சுதந்திரம் மற்றும் இந்தியாவில் அதன் வரம்புகள் தொடர்பாக, கடந்த சில தினங்களாக மத்திய அரசிற்கும், ட்விட்டர் நிறுவனத்திற்கும் இடையே கூர்மையாகக் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
“பயிற்சி இடைவேளையின் போது தொழுகை நடத்தியது குற்றமா?” – கிரிக்கெட் பயிற்சியாளர் வசீம் ஜாஃபர்
குடியரசு தின வன்முறைகுறித்து தவறான தகவல் பதிவிட்டது மற்றும் வன்முறையைத் தூண்டியது போன்ற குற்றச்சாட்டின் கீழ், பத்திரிக்கையாளர்கள், செயல்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் கணக்குகள் உள்ளிட்ட 1178 ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என ட்விட்டர் நிறுவனத்திடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
அரசாங்கத்தின் கோரிக்கையை .முழுவதும் ஏற்க மறுத்துள்ள ட்விட்டர் நிறுவனம், இந்தக் கோரிக்கை இந்தியாவில் நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு முரணானது என்றும், இருப்பினும் சில கணக்குகளை இந்தியாவிற்குள் மட்டும் முடக்கி வைத்திருப்பதாகவும், பதில் அளித்துள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் டிவிட்டர் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடும் வகையில் அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் பேசியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.