Aran Sei

அம்மா மினி கிளினிக் பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் உத்தரவை திரும்பப் பெறுங்கள் – தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ வேண்டுகோள்

ம்மா மினி கிளினிக் பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று  தமிழ்நாடு அரசுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி  வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக. அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடந்த அதிமுக ஆட்சியின் நிறைவுப் பகுதியில் அம்மா மினி கிளினிக் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டது. இந்த மினி கிளினிக்கில், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதாரப் பணியாளர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அதன்படி 1820 மருத்துவர்களும், 1420 பன்நோக்கு மருத்துவ பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், திமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, அந்த திட்டத்தை கைவிடும் அறிவிப்புகள் எடுக்கப்பட்டன. அம்மா மினி கிளினிக் மூலம் மக்களுக்கு எந்த பயனும் இல்லை  எனக்கூறி ஓராண்டு திட்டமாக துவங்கப்பட்ட அந்த திட்டத்தை மூடும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

வேதங்களின் நாடா இந்தியா? வரலாற்றைத் திரிக்கும் இந்துத்துவாவினர் – சூர்யா சேவியர்

முன்னதாக, இந்த திட்டம் துவங்கிய போது தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியதால், அம்மா மினி கிளினிக்கில் உள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்கள்  அனைவரும் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.  உயிரைப் பொருட்படுத்தாமல் அவர்கள் மேற்கொண்ட கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகள் சிறப்பானவையாக அமைந்திருந்தன. இந்த சூழலில் மார்ச் 31-ஆம் தேதியுடன் அவர்களை பணி நீக்கம் செய்யும் தமிழக அரசின் ஆணை வெளியாகியுள்ளது. இந்த பணி நீக்க உத்தரவால் அவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்ட அதேவேளையில், அந்த திட்டத்திற்கு மாற்றாக, திமுக அரசு சார்பாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது. அந்த திட்டத்திற்கு அம்மா மினி கிளினிக்குகளில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை பயன்படுத்திக் கொள்வதன் மூலம், ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதோடு, ஏற்கனவே பெற்றுள்ள முன் அனுபவம் மூலம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடியும்.

TNPSC விண்ணப்பத்தில் சர்ச்சை – இஸ்லாமியர்களுக்கு மட்டும் மதம் மாறியவர்களா என்று கேள்வி

மேலும், கொரோனா திரிபு அச்சம் இன்னும் முடிவடையாத சூழலிலும், மக்களின் மருத்துவத் தேவைகள் அதிகரித்துள்ள சூழலிலும், அனுபவம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை தக்கவைத்துக் கொள்வதே சிறந்ததாக இருக்கும்.

ஆகவே, தமிழக அரசு பணி நீக்க அரசாணையை திரும்பப்பெற்று, அம்மா மினி கிளிக்குகளில் பணி செய்த மருத்துவர்கள் மற்றும் பன்நோக்கு மருத்துவ பணியாளர்களை தொடர்ந்து பணி செய்யவும், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நிரந்தரம் செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாக எஸ்.டி.பி.ஐ அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்